Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதிகாரிகள் முன்னிலையில் நடந்த வெள்ளையாபுரம் திருமணம்!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள ம.வெள்ளையாபுரம் கிராமத்தில் ராமமூர்த்திக்கும் ரேணுகாதேவிக்கும் சமூக நல அலுவலர்கள் முன்னிலையில் இன்று காலை திருமணம் நடந்து முடிந்தது. இதில் அப்படியென்ன விசேஷம் என்கிறீர்களா?
இதே தினத்தில்தான் இரண்டு பெண்களைத் திருமணம் செய்யப்போவதாக மணமகன் ராமமூர்த்தி பத்திரிகை அடித்திருந்தார். அத்தகவல் இணையதளத்திலும் ஊடகங்களிலும் பரவி பெரும்பரபரப்பானது. 

வெள்ளையாபுரம்

தாய்மாமன் மகளான ரேணுகாதேவியோடும் மற்றொரு மாமா மகளான உடல்நலமில்லாத காயத்ரியையும் உறவினர்கள், ஊரார் சம்மதத்தோடும் மணம் முடிக்கபோகிறார் என்று கூறப்பட்டது. ஜோதிடர் சொன்னதால் அப்படிச் செய்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது. என்னதான் சென்டிமென்டான விஷயமாக இருந்தாலும், சட்டப்படி இது குற்றம் என்பதால், உஷாரான விருதுநகர் மாவட்ட நிர்வாகம் உடனே ம.வெள்ளையாபுரத்தில் விசாரணையில் இறங்கினார்கள்.

ஒரேநேரத்தில் இரு பெண்களை மணப்பதாக இருந்தால், வழக்கு பதியப்படும் என்று எச்சரிக்கப்பட்டபின், 'தவறுதலாகப் பத்திரிகையில் என் தம்பி மகளின் பெயரும் இடம் பெற்றுவிட்டது, என் மகள் ரேணுகாதேவிக்கும் ராமமூர்த்திக்கும் மட்டும்தான் திருமணம் நடக்கும்' என்று சமூக நல அலுவலரிடம் உத்தரவாதம் கொடுத்தார் மணமகளின் தந்தை அழகர்சாமி. அதைத்தொடர்ந்து ம.வெள்ளையாபுரம் கிராமத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்தப் பரபரப்புகளை கடந்து இன்று காலை சமூக வழக்கப்படி ரேணுகாதேவியைத் திருமணம் செய்துகொண்டார் ராமமூர்த்தி. தொடர்ந்து இக்கிராமம் சமூகநலத்துறையினரின் கண்காணிப்பில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close