Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓணம் பண்டிகை: தோவாளை மார்க்கெட்டில் விற்பனை அமோகம்!

இந்தியா முழுவதும் ஓணம் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணம் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது பலவகை பூக்களால் அலங்கரிக்கப்படும் அத்தப்பூ கோலம். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தோவாளை பூச்சந்தையில் பூக்களின் விற்பனை களைகட்டுகிறது.

kanniyakumari
 

வழக்கமாக ஓணம் என்றால் தோவாளை சந்தையிலிருந்துதான் அதிகப்படியான பூக்கள் கேரள மாநிலத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனை செய்யபடுகிறது. அதேபோல் இவ்வருடமும் பூக்கள் விற்பனை சூடு பிடித்துவருகிறது. கடந்த ஒரு வாரமாகவே கேரளாவுக்கு ஏற்றுமதி மட்டும் அல்லாமல் கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

flowers
 

குறிப்பாக நேற்று இரவிலிருந்து பூக்கள் விற்பனை வேகமாக நடைபெற்று வருகிறது. ஓணம் பண்டிகையால் பெரிய கடைகளில் மட்டுமல்லாமல் சிறு கடைகளிலும் குடிசைத் தொழிலாளர்களின் கடைகளிலும் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.  மார்க்கெட்டில் மல்லி, முல்லை, மஞ்சள் சாமந்தி, வெள்ளை சாமந்தி, வாடாமல்லி, ரோஜாப்பூ உட்பட பல வகையான பூக்களின் விற்பனையும் அமோகமாக நடைபெறுகிறது.

flowers

 

மார்க்கெட்டில் தோவாளை விற்பனை பற்றி வியாபாரிகளிடம் கேட்டதுக்கு, "நம்ம ஊருல பூவெல்லாம் ரொம்ப பேமஸ்ங்க. ஓணம்னா எப்பவுமே வியாபாரம் களகட்டும்ங்க. இந்த வருஷமும் வியாபாரம் நல்ல விதமா போகுதுங்க. இந்த 5-6 நாளா ராத்திரி பகல்னு பாக்காம கேரளாவுக்கு பூக்கள அனுப்பிக்கிட்டு இருக்கோம். ரொம்ப சந்தோஷமா இருக்குங்க..." என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close