Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வசதிகள் இல்லாத ரயில் நிலையம் ; வருமானம் மட்டும் ரூ.80 கோடி

நெல்லை ரயில் நிலையத்தின் ஆண்டு வருமானம் ரூ.80 கோடியை எட்டிய நிலையில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

railway station

தென்னக ரயில்வேவுக்கு வருமானம் ஈட்டித்தரும் ரயில் நிலையங்களில் ஒன்றாக நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் உள்ளது. கடந்த நிதியாண்டான  2016-2017-ம் வருடத்துக்கான நிதி குறித்த புள்ளிவிவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் ரயில் நிலையங்கள் வருவாய் குவிக்கும் மையங்களாக மாறி இருக்கும் விவரம் தெரிய வந்துள்ளது. 

கடந்த நிதியாண்டில் மட்டும் நெல்லை ரயில் நிலையத்தின் மூலமாக ரூ.80,64,71,000 வருமானம் கிடைத்து இருக்கிறது. இதுவே முந்தைய நிதியாண்டில் ரூ. 77 கோடியாக இருந்தது. கடந்த ஓராண்டில் மட்டும் நெல்லை ரயில் நிலையம் 3 கோடி ரூபாய் தென்னக ரயில்வேக்கு கூடுதலாக வருவாய் ஈட்டிக் கொடுத்துள்ளது. கடந்த ஓராண்டில், நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து 49,43,607 டிக்கெட்டுகள் பல்வேறு இடங்களுக்கு எடுக்கப்பட்டுள்ளன. 

நெல்லை மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் உள்ள செங்கோட்டை சிறிய ரயில் நிலையமாக இருந்தபோதிலும் அங்கிருந்து கடந்த நிதியாண்டில் ரூ.6,03,75,000 வருவாய் கிடைத்து இருக்கிறது. அந்த ஸ்டேஷனிலிருந்து 5,90,855 பேர் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளனர். அதன் மூலமாகவும் சாதாரண டிக்கெட்டுகள் மற்றும் பிளாட்பாரம் டிக்கெட் போன்றவற்றின் மூலமாக இந்த வருவாய் கிடைத்து இருக்கிறது. இதேபோல, கடையநல்லூர், சங்கரன்கோவில் ரயில் நிலையங்களும் அதிக வருவாய் உள்ளதாக மாறிவருவது புள்ளிவிவரத்தின் மூலமாகத் தெரிய வந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர், கோவில்பட்டி உள்ளிட்ட நகரங்களின் வருவாயும் கணிசமாக உயர்ந்துள்ளது.

வருவாய் ஈட்டிக் கொடுப்பதில் நெல்லை ரயில் நிலையம் முன்னணியில் இருந்தபோதிலும், அடிப்படை வசதிகளில் பின் தங்கிய நிலையில் இருப்பதாக ரயில் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த ரயில் நிலையத்தின் நகரும் படிக்கட்டுக்கள் பெரும்பாலான சமயங்களில் இயங்குவதில்லை. அதைச் சரி செய்யவும் அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை. அத்துடன், ரயில்களின் பெட்டிகள் நிற்கும் இடம் குறித்த தகவல் பலகை அனைத்து நடைமேடைகளிலும் கிடையாது. பயணிகளின் அடிப்படைத் தேவைகளுக்கான பாத்ரூம் வசதி கூட போதுமானதாக இல்லை.

செங்கோடை ரயில் நிலையம் வருவாய் கொழிக்கும் ஸ்டேஷனாக இருந்தபோதிலும், செங்கோட்டை-புனலூர் இடையேயான இரட்டை ரயில் பாதைத் திட்டம் கடந்த பல வருடங்களாக முடிக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. அத்துடன், மணியாச்சி-தூத்துக்குடி இடையிலான இரட்டை ரயில் பாதைக்காக இதுவரை நிதிகூட ஒதுக்கப்படவில்லை என்பது பயணிகளின் குறையாக உள்ளது. வருவாய் கிடைக்கும் ரயில் நிலையங்களின் அடிப்படைத் தேவைகளை அதிகாரிகள் சரிப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுவடையத் தொடங்கி உள்ளது.   

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close