Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நதிகளை இணைக்கும் ஜக்கி வாசுதேவ் விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்பு!

நதிகளை இணைத்து பாரதம் காப்போம் என்ற முழக்கத்தோடு ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் விழப்பு உணர்வுப் பேரணியை நேற்று கோவையில் தொடங்கினார். இன்று  மதுரை வந்தவர், காந்தி மியூசியத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார், இதில், தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு கலெக்டர் வீரராகவராவ் ஆகியோர் கலந்துகொண்டனர். மத்திய, மாநில அரசுகளின் ஆதரவோடு ஜக்கி வாசுதேவ்  இதை நடத்துவதால் அதிகாரிகள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.

ஜக்கிவாசுதேவ்

மக்களிடம் பேசிய ஜக்கி வாசுதேவ், ''இந்த விழிப்பு உணர்வு பேரணியானது செப்டம்பர் மூன்றாம் தேதி தொடங்கி தொடர்ந்து 30 நாள்களுக்கு நடைபெறுகிறது. இந்தப் பேரணியின் மூலம் 7,000 கிலோ மீட்டர் கடக்க உள்ளனர். நதிகளைக் காக்க இந்தப் பேரணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி மக்களின் முயற்சி. 40 ஆண்டுகளில் நதிகளை மீட்டெடுக்க முடியும். குமரி முதல் நாடெங்கும் 7ஆயிரம் கிலோ மீட்டர் பயணிக்க உள்ளோம். வரும் காலத்தில் விஞ்ஞான முறையில் விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும்'' என்றார். 

 அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசும்போது, ''நதிகளைக் காக்க சத்குரு எடுத்த முயற்சியை வரவேற்கிறேன். தமிழகத்தில் நீர்நிலைகளைக் காக்க அரசு 2,000 கோடி ஒதுக்கியுள்ளது. கடந்த தி.மு.க ஆட்சியில் நடந்த ஆக்கிரமிப்புகளால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அம்மாவின் ஆட்சியில் இதைச் சரிசெய்து வருகிறோம்" என்றார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close