Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அனிதா இறுதிச் சடங்கில் முதல்வர் பங்கேற்காதது ஏன்? - தங்கத்தமிழ்ச் செல்வன் கேள்வி

"மாணவி அனிதாவின் இறுதிச் சடங்குகில் முதல்வரோ துணை முதல்வர் அல்லது அமைச்சர்களோ கலந்துகொள்ளாதது ஏன்?" என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கத்தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பினார். 

தங்கதமிழ் செல்வன்


அ.தி.மு.க தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தற்போது புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் சில  எம்.எல்.ஏ-க்கள் இல்லை என்ற தகவல் பரவியது.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கத்தமிழ்ச்செல்வன், "புதுச்சேரி விடுதியில் தற்போது எம்.எல்.ஏ-க்கள் இல்லை என்பது தவறான தகவல். அவர்கள் சொந்த காரணத்துக்காக ஊருக்குச் சென்றுவிட்டு திரும்பிவிட்டனர். இன்னும் இரண்டு நாள்களில் ஆளுநர் எங்களை அழைக்காவிட்டால், அதன் பிறகு கூடிப் பேசி முடிவு செய்வோம். 

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை தற்போது 25 ஆக உயர்ந்துள்ளது. தி.மு.க அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சி கூட்டதில் நாங்கள் பங்கேற்கவில்லை. நாங்கள் கலந்துகொள்வதாக திவாகரன் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் இறுதிச் சடங்கில் முதல்வரோ துணை முதல்வர் அல்லது அமைச்சர்களோ கலந்துகொள்ளாதது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close