Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தப்பியோடிய விசாரணைக் கைதி..! தேடிப்பிடிக்கும் முயற்சியில் காவல்துறை

திருப்பூர் கிளைச் சிறையிலிருந்து விசாரணைக் கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம் காவல்துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பூர் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பரபரப்பான குமரன் சாலை பகுதியில் அமைந்திருக்கிறது திருப்பூர் கிளைச் சிறை. நீதிமன்ற வளாகத்தையொட்டி உள்ள கட்டடத்தில் பல வருடங்களாக இயங்கி வரும் இந்த கிளைச் சிறையில் பல்வேறு வழக்குகளின் கீழ் விசாரணையில் உள்ள கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூரில் சமீபத்தில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட ரஞ்சித்குமார் என்பவரை, இந்தக் கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக அடைத்து வைத்திருந்தனர் காவல்துறையினர், இந்நிலையில் கிளைச் சிறைக்குள் குளிப்பதற்காக சென்ற கைதி ரஞ்சித்குமார், அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் தப்பித்து சிறை வளாகத்தில் இருந்து வெளியேறி சென்றுவிட்டதாகத் தெரிகிறது. இச்சம்பவம் தொடர்பாகக் கிளைச் சிறை அதிகாரிகள் திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் புகாரின் அளிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தப்பியோடிய கைதி ரஞ்சித்குமாரை  தேடிப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close