Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நவம்பர் 17-க்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை வருகின்ற நவம்பர் மாதம் 17-ம் தேதிக்கு முன்பாக நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

உயர் நீதி மன்றம்


தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்து 11 மாதம் ஆகிறது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் தி.மு.க தொடர்ந்த வழக்கால் தள்ளிப்போனது. அதன் பிறகு, தற்போது வரை உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் குறித்து தமிழக தேர்தல் ஆணையம் எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகத் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள், உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற்று வந்தது. இன்று அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அதில், "உள்ளாட்சித் தேர்தலை வருகின்ற நவம்பர் மாதம் 17-ம் தேதிக்கு முன்பாக நடத்த வேண்டும். இந்தத் தேர்தலுக்கான அறிவிப்பை வருகின்ற 18-ம் தேதிக்குள் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்" என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close