Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’டாக்டர் கிருஷ்ணசாமிக்குப் பாதுகாப்பு வேண்டும்!’ - அர்ஜுன் சம்பத் கோரிக்கை

 

அர்ஜுன் சம்பத்

நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து அனிதா மரணத்துக்கு நியாயம் கேட்டும், நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் அனிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. எனவே, அனிதாவைத் தற்கொலைக்குத் தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

அம்மனுவில், "அனிதாவைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றிவாளிகளைக் கண்டறிய சி.பி.ஐ விசராணை செய்ய உத்தரவிட வேண்டும். நீட் தேர்வை ஆதரவு செய்யும் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் தமிழகத்தின் இந்து இயக்கத் தலைவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும். நீட் தேர்வு குறித்து அவதூறு பிரசாரங்கள் மேற்கொண்டு தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னைகளை உண்டாக்க நினைக்கும் நக்சலைட், ஜிகாதி, கிறிஸ்துவ, கம்யூனிச, திராவிட கழகங்கள், மே 17 இயக்கம் குறிப்பிட்ட தலித் அமைப்புகள் உள்ளிட்ட பல இயக்கங்களையும் தடை செய்ய வேண்டும். நீட் தேர்வுக்கு ஆதரவாகச் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும், தி.மு.க-வுக்கு ஆதரவாகச் செயல்படும் நடிகர் கமல், திருமாவளவன், சீமான், கெளதமன், அமீர் ஆகியோரின் தேசவிரோதக் கருத்துகளைத் தடை செய்ய வேண்டும். மேலும், நீட் தேர்வு முறையைத் தமிழகத்தில் கட்டாயமாக்க வேண்டும்” என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது .

இந்த மனுவை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டது அப்போது ,மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் உள்ளிட்ட  கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்  .

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close