Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஆந்திராவில் முடிகிறது; தமிழகத்தில் முடியாதா?' - வலுக்கும் நீட் எதிர்ப்புப் போராட்டம்

 

பிளஸ் டூ வகுப்பில் 1,176 மதிப்பெண் பெற்று நீட் தேர்வால் மருத்துவம் செல்ல முடியாமல் மனம் தளர்ந்த அனிதா தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளதோடு எந்த நேரத்திலும் மாணவர்களும், அரசியல் கட்சிகளும் கிளர்ச்சி செய்யக் கூடும் எனத் தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலையே நிலவிக்கொண்டிருக்கிறது.

சென்னை, மதுரை, திருச்சியைத் தொடர்ந்து சேலத்திலும் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறன. முதல்வர் மாவட்டம் என்பதால் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பதோடு பத்துப் பேர் கூடி தொடர் உண்ணாவிரதம் நடத்த முற்பட்டால் உடனே போலீஸார் கைது செய்துவிடுகிறது. 

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கூடிய நாம் தமிழர் கட்சியினர் மற்றும் கலாம் நண்பர்கள், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டங்கள் செய்தார்கள். அதில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கோவேந்தன், ''மத்திய, மாநில அரசுகள் மாணவி அனிதாவைக் கொலை செய்துவிட்டன. கல்வி மாநில அரசின் உரிமை. அதில் மத்திய அரசு தலையிட எந்த அதிகாரமும் இல்லை. மத்திய அரசு மாணவர்கள் மீது தொடுக்கப்பட்ட போர்தான் நீட்.

தேர்வு என்பது தான் படித்த பாடத்திட்டத்திலிருந்து கேள்விகள் கேட்கப்பட வேண்டும். நம் பாடத்துக்கு சம்பந்தம் இல்லாத கேள்வி வந்தால் அதை ஆசிரியர்கள் விட்டுவிடச் சொல்லுவார்கள். அதற்கு முழு மதிப்பெண் கொடுப்பது நம் கல்வி முறை. ஆனால், அனிதா மாநிலக் கல்வித் திட்டத்தில் படித்து 1176 மதிப்பெண் பெற்றார். அவர் படித்த பாடத்திட்டத்துக்குச் சம்பந்தம் இல்லாத பாடத்திட்டத்தில் கேள்விகள் கேட்டதாலும், இந்த ஆண்டு நீட் தேர்வு வராது என்று மாநில அரசு உறுதிப்படக் கூறியதாலும் நீட் தேர்வில் அனிதாவால் போதிய மதிப்பெண் பெற முடியாமல் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டார். இதற்கு மத்திய, மாநில அரசுகள்தான் காரணம். எனவே, தமிழகத்தில் நீட் தேர்வை முழுமையாக நீக்க வேண்டும்'' என்றார்.


அடுத்து, சேலம் மத்திய தபால் தந்தி அலுவலகத்தின் எதிரே நீட் தேர்வுக்கு எதிரான மாணவர், இளைஞர் கூட்டமைப்பின் சார்பாகப் போராட்டம் நடைப்பெற்றது. இதில் பேசிய மக்கள் ஜனநாயகக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கண்ணன், ''ஆந்திரா மாநிலத்தில் 371 வது சட்டப்பிரிவின்படி அந்த மாநிலத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மட்டுமே மருத்துவக் கல்வி படிக்க முடியும். மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு சென்று படிக்க முடியாது. நீட் தேர்வு என்பது மறைமுக குலக்கல்வி முறை. அதைத் தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது. மாணவர்களும் இளைஞர்களும் இதற்காகப் போராட வேண்டும்'' என்றார்.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close