Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வனத்துறை அமைச்சர் தலைமையில் மண்டல வனத்துறை ஆய்வுக் கூட்டம்!

வனத்துறையின் திட்டச் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் மதுரை மாவட்ட வனஅலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வனத்துறைத் தலைவர் பசுவராஜ் மற்றும் ஐந்து மாவட்ட வன அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வனத்துறை

இந்த ஆய்வுக்கூட்டத்தில்  4.9 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் தேனி மதுரை மாவட்டங்களுக்குட்பட்ட வைகை நதி புனரமைப்புத் திட்டம், தமிழ்நாடு காடு வளர்ப்புத்  திட்டங்கள்,  மற்றும் தேசிய காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் மதுரை மண்டலத்தில் செய்யப்படும் திட்டப்பணிகள், யானைகள் திட்டம், வறட்சிக்காக மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகள், வன உயினங்களுக்குக் குடிநீர் வசதி ஏற்படுத்துதல் போன்ற பல திட்டங்களைப் பற்றியும், வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பாகவும் ஆய்வு செய்தனர்.

நடப்பு ஆண்டுக்குரிய அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்த துரிதநடவடிக்கை எடுக்குமாறும், மதுரை மற்றும் விருதுநகர் மண்டலங்களின் வனப்பரப்பை அதிகரிப்பது மற்றும் வனவிலங்கு மோதலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு வன விலங்குகளால் ஏற்படும் பயிர்ச் சேதம் மற்றும் உயிரிழப்புகளுக்கான நிவாரணத்தை உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவும் ஆலோசிக்கப்பட்டது. தமிழ்நாடு காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 245 பயனாளிகளுக்குக் கடனுதவியை அமைச்சர் வழங்கினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close