Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தூய்மை இந்தியா திட்டத்தில் குறும்படங்கள் எடுத்த கிராம மக்கள்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கிராமப்புறப்பகுதிகளில் விழிப்புஉ ணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஊராட்சி முகாம் மூலமாக மதுரை மாவட்ட ஆட்சியர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். மதுரை மேற்கு ஒன்றியம் கோயில் பாப்பாகுடி ஊராட்சியில் அதற்கான நிகழ்ச்சி இன்று நடந்தது.

வீரராகவராவ்

‘தூய்மையான இந்தியாவை உருவாக்குவதற்கு என்னால் இயன்றவை என்ன?’ என்ற தலைப்பில் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரைப்போட்டி நடந்தது. இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.சுயஉதவிக்குழுக்களுக்கு குறும்படப்போட்டியும் நடத்தப்பட்டது. இதில் பலரும் கலந்து கொண்டனர். மிகச்சிறப்பாக பல குழுவினர் குறும்படங்களை எடுத்திருந்தனர்.

அப்படங்களை மாவட்ட ஆட்சியர் பார்த்து சிறந்த படங்களைத் தேர்வு செய்தார். இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், ‘’தூய்மை இந்தியா திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்ல, விழிப்புஉணர்வு ஏற்படுத்த இதுபோல ஒவ்வோர் ஊராட்சியிலும் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்படும்’’ என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close