Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’போலி ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளார் தனுஷ்’ - நீதிமன்றத்தில் புதிய புகார்

போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்தியதற்காக நடிகர் தனுஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கதிரேசன் உயர் நீதிமன்றக் கிளைப் பதிவாளரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த எம்.மலம்பட்டியைச் சேர்ந்தவர்கள் கதிரேசன் - மீனாட்சி தம்பதி. நடிகர் தனுஷ் தங்களது மகன் என உரிமை கோரி மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்தத் தம்பதியினர் வழக்கு தொடர்ந்தனர். மேலூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி, நடிகர் தனுஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கதிரேசன் - மீனாட்சி தம்பதி தொடர்ந்த மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த ஏப்ரல் மாதத்தில் உத்தரவிட்டது. 

கதிரேசன் - மீனாட்சி தம்பதி

இந்நிலையில், வழக்கு தொடர்பாக நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் போலியானவை என்று கூறி உயர் நீதிமன்ற மதுரைக் கிளைப் பதிவாளரிடம் புகார் மனு ஒன்றை கதிரேசன் அளித்திருக்கிறார். அதில், ’தனுஷ் வழக்கில் மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றத்திலும் தனுஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில், தனுஷின் கையெழுத்து போலியாக போடப்பட்டுள்ளது. இதை உள்நோக்கத்துடன் தனுஷ் செய்துள்ளார். இவரது செயலால் நீதிமன்றத்தின் மதிப்புக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது. இதனால் போலி ஆவணம் தாக்கல் செய்தது தொடர்பாக விசாரணை நடத்தி, இதில் தொடர்புடைய அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு மேல் நடவடிக்கைக்காக சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக மதுரை உயர் நீதிமன்றப் பதிவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close