Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மாநில அரசுகள் நீட்தேர்வை ஆதரிக்கக் காரணம் இதுதான்’… திரிகொளுத்தும் திருமாவளவன்

நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடிக்கின்றன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக செங்கல்பட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் கண்டன உரையாற்றிய திருமாவளவன், ’மாநில அரசுகள் நீட் தேர்வை  எதிர்க்காமல் இருப்பதற்கு,  மோடி மீதான பயம்தான் காரணம்’ என்றார்.

நீட்

மேலும், அவர் பேசுகையில், ‘மாநிலப் பாடத்திட்டத்திலே பயிலும் மாணவர்கள் அந்தப் பாடங்களையெல்லாம் படித்து விட்டு தேர்வெழுதுகிறார்கள். அதிலே அவர்கள் தகுதி தீர்மானிக்கப்படுகிறது. அதுதானே தகுதி. பிறகு புதிதாக எதற்கு ஒரு தகுதித் தேர்வு. நீட் தேர்வு என்பது மாணவர்களின் எதிர்காலத்தை மட்டும் பாதிக்கும் செயல் அல்ல. மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் செயல். ஆனால், மாநில உரிமைகளைப் பற்றி சிந்திக்கின்ற அரசு தமிழகத்திலே இல்லை. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் அந்தச் சிந்தனை இல்லை. ஆட்சியில் இருப்பவர்கள் அடித்த கொள்ளையினால் எந்த நேரத்திலே சிபிஐ சோதனை நடக்குமோ. வருமான வரிச் சோதனை நடக்குமோ. என மாநில அரசுகள் அச்சப்படுகின்றன. இந்தியா முழுவதும் இந்த பயத்தை மோடி உருவாக்கியிருக்கிறார். மோடி நினைத்தால் மத்திய அரசு அதிகாரிகள் மூலம் எந்த நேரத்திலும் ரெய்டு நடத்துவார் என்பதால் இவர்கள் மத்திய அரசிற்கு கும்பிடு போடுவார்கள். தமிழக அரசியலில் இரண்டு குழுக்களாக மாறி பஞ்சாயத்து செய்து கொண்டிக்கிறார்கள். பாரதிய ஜனதா இங்கே பினாமி அரசை நடத்திக் கொண்டிருக்கிறது. தமிழகம் ஒரு சட்டத்தைப் போட்டு மத்திய அரசிற்கு அனுப்புகிறது. அதனால், அனிதா போன்றவர்கள் நீட் தேர்விற்கு பயிற்சி பெறவில்லை. கல்வித்தரம் என்றால் நல்ல பாடத்திட்டங்களை வரையறை செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள எத்தனை பள்ளிகளில் கட்டட வசதிகளையும், நூலகங்களையும், விளையாட்டு மைதானத்தையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள்?’ என்றார் திருமாவளவன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close