Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

`கறுப்புப் பணத்தை கணக்குப்பார்க்கிறோம்!' - சொல்கிறது ஆர்.பி.ஐ.!

பண மதிப்பிழப்புக்குப் பிறகு, மீட்கப்பட்ட கறுப்புப் பணம் எவ்வளவு என்ற விவரத்தை ரிசர்வ் வங்கி வெளியிட மறுத்துவிட்டது. 
கறுப்புப் பணத்தை மீட்கவே, பண மதிப்பிழப்பு என்று ஒரே இரவில் இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் பிரதமர் மோடி. 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அந்த அறிவிப்பால், பொதுமக்கள் தங்கள் வசம் இருந்த உயர் மதிப்பு நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றவேண்டிய நிலை ஏற்பட்டது. அதே நேரம், கறுப்புப் பணமாக ஒரு சிலரிடம் குவிந்திருந்த உயர் மதிப்புப் பணத்தை மாற்ற முடியாமலும் திண்டாடினர். இந்த அதிரடி அறிவிப்பால் கறுப்புப் பணம் பெருமளவில் மீண்டுவிடும் என்று மத்திய அரசும் உறுதியாக நம்பியது. பலர், தங்களிடம் இருந்த கறுப்புப் பணத்தை அபராதத் தொகையுடன் வங்கிகளில் திருப்பிச்செலுத்திய சம்பவங்களும் சில இடங்களில் நடந்தேறின. 

ரிசர்வ் வங்கி

பண மதிப்பிழப்பு அறிவிப்பு நடந்து 10 மாதங்களைக் கடந்துவிட்ட நிலையில், இந்தியாவில் கறுப்புப் பணம் எவ்வளவு மீட்கப்பட்டது என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பிவருகின்றனர். இந்நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை ஒன்றில், 'பண மதிப்பிழப்புக்கு வங்கிகளுக்கு வந்து சேர்ந்த ரூ.15.28 லட்சம் கோடியில், கறுப்புப் பணம் எவ்வளவு என்பதை இப்போது சொல்ல இயலாது. காரணம், ஒரே நேரத்தில் அதிக அளவிலான பணம் வங்கிகளில் குவிந்ததால், அவற்றைக் கணக்குப்பார்க்கும் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. அதனால், எங்களுக்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறது. 

அதேபோல, எவ்வளவு கறுப்புப் பணம் வெள்ளையாக மாறியது என்பதுகுறித்தும் எங்களால் இப்போது தெளிவாகச் சொல்ல முடியாது' என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. 'பண மதிப்பிழப்பினால் கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியாது' என்று எதிர்க்கட்சிகள் வசைபாடி வரும்நிலையில், ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், கறுப்புப் பண விவகாரம்குறித்து ரிசர்வ் வங்கி கொடுக்கும் அறிக்கையை, முதலில் நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்ய வேண்டும் என்பதால், எப்போது அறிக்கையைத் தாக்கல் செய்யப்போகிறீர்கள் என்று மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகளும் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளன.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close