Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதுச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீஸ்!

அனிதா மரணத்துக்கு நியாயம் கேட்டும், நீட் தேர்வை மத்திய அரசு நிரந்திரமாக ரத்து செய்யக்கோரியும் புதுச்சேரியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏ.எப்.டி மைதானத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இதையடுத்து, அவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியுள்ளனர்.


அரியலூரைச் சேர்ந்த அனிதா என்ற மாணவிக்கு நீட் தேர்வால் மருத்துவப் படிப்பு படிக்க இடம்  கிடைக்காமல்போனது. இதனால், அவர் மன விரக்தி காரணமாக தற்கொலை செய்துகொண்டார். அனிதாவின் தற்கொலைச் சம்பவத்தை அடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர், மாணவர்கள் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்நிலையில், அனிதா மரணத்துக்கு நியாயம் கேட்டும் நீட் தேர்வை, மத்திய அரசு நிரந்திரமாக ரத்துசெய்யக்கோரியும், நேற்று காலை பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, துணை நிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். 

 மாலையில், சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏ.எப்.டி மைதானத்தில் அமர்ந்து மெழுகுவத்தி ஏந்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த புதுச்சேரி காவல்துறை எஸ்.பி. வெங்கடசாமி, மாணவர்களைக் கலைந்துசெல்லுமாறு அறிவுறுத்தினார். இருந்தபோதிலும், மாணவர்கள் தங்களின் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினர். இதையடுத்து, நாளை வேறு ஓர் இடத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படும் என போலீஸார் போரட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கூறினர். இருந்தபோதிலும், அவர்கள் அந்த இடத்திலிருந்து கலைய மறுத்துவிட்டனர். இதையடுத்து, போராட்டக்காரர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தி, கோரிமேடு காவலர் மைதானத்தில் உள்ள சமூதாயக் கூடத்தில் அடைத்துவைத்தனர். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், இதைப் போன்று வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி அடைக்கப்பட்டது, புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close