Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

`ஆட்டோமேஷன்' ஆதிக்கத்தால் 7.5 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம்!

நம் நாட்­டில், அடுத்த ஐந்து ஆண்­டு­களில் 7.5 லட்சம் பேர் ஆட்­டோ­மே­ஷன் ஆதிக்கத்தால் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆட்டோமேஷன்


உலகம் முழுவதும், மனி­தன் உத­வி­யின்றி தன்­னிச்­சை­யாகப் பணி­களை மேற்­கொள்­ளும் ‘ரோபோ சாஃப்ட்­வேர்’களின் ஆதிக்­கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இந்திய நிறுவனங்கள் தங்களது பணியை மேம்படுத்தும் நோக்கிலும், செலவைக் குறைக்கும் வகையிலும் ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முன்வந்துள்ளன. இதையடுத்து, இந்­திய ஐ.டி மற்­றும் பி.பி.ஓ துறை­களில் ‘ஆட்­டோ­மே­ஷன்’ தொழில்­நுட்­பத்­தின் தாக்­கம்குறித்து எச்.எப்.எஸ் ரிசர்ச் நிறு­வ­னம் ஆய்வுசெய்து, ஆய்­வ­றிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "மனி­தனின் தய­வின்றி பணி­களை முடிக்­கக்கூடிய ஆட்டோமேஷன் தொழில்­நுட்­பங்­களைச் சாதா­ரண பணி முதல் நடுத்­த­ர மற்­றும் அதிகத் திறன் தேவைப்­படும் பணி­க­ளுக்­கும் பயன்­ப­டுத்தப்பட உள்ளது. இத­னால், இத்­த­கைய பணி­களில் உள்­ளோர், தன்­னிச்­சை­யாகச் செயல்­படும் ரோபோ சாஃப்ட்­வேர்களின் சவாலை, அடுத்த ஐந்து ஆண்­டு­களில் எதிர்­கொள்ள வேண்டியிருக்கும். ஆகையால், ஆட்­டோ­மேஷன் ஆதிக்கத்தால், குறைந்த திறன் தேவைப்­படும் பிரி­வு­களில் 7.5 லட்­சம் பேர் வேலை­யி­ழக்­கும் அபா­யம் ஏற்பட வாய்ப்புள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close