Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’ஸ்லீப்பர் செல்லில் எத்தனை எம்.எல்.ஏ-க்கள்?’ - புதுச்சேரியில் கலகலத்த வெற்றிவேல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் எதுவுமே செல்லாது என்றும்,  எடப்பாடி அணியினருடன் எக்காரணம்கொண்டும் இணைய மாட்டோம் என புதுச்சேரியில் தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார். 

vetrivel

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், அதற்குப் போட்டியாக புதுச்சேரியில் தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் வெற்றிவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியப்பனைத் தவிர மற்ற 20 சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.  கூட்டத்தில் சபாநாயகர் நோட்டீஸுக்குப்  பதில் அளிப்பது தொடர்பாகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றுவரும் ஆலோசனைக் கூட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 

vetrivel

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், ‘சபாநாயகர் அனுப்பிய விளக்கக் கடிதம் தொடர்பாக தானும், தங்க தமிழ்செல்வன், பழனியப்பன் உள்ளிட்டவர்கள் சபாநாயகரை இன்று சந்திக்கின்றோம். இதன் பிறகு தலைமைச் செயலாளரைச் சந்திக்க உள்ளோம். தமிழகத்தில் ஜெயலலிதாவின் கொள்கை ஆட்சி நடைபெறவில்லை. ஜெயலலிதாவின் விருப்பப்படி நீட் தேர்வு வழிமுறைகள் மாநில அரசு பின்பற்றவில்லை. அதிமுகவில் அணிகள் கிடையாது. 

நாங்கள்தான் கட்சி. எடப்பாடி பழனிசாமி அணியினர் நடத்தும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், பொதுக்குழு கூட்டம் மற்றும் செயற்குழுக் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகள் எதுவும் எங்களைக் கட்டுப்படுத்தாது. அது செல்லாது. மேலும் எடப்பாடி பழனிசாமி அணியில் ஒருபோதும் இணைய மாட்டோம். சமாதானப் பேச்சுக்கே இடமில்லை.

Z பிளஸ் கேட்டகிரியில் இருக்கும் முதல்வர் மற்றும் துணைமுதல்வர், பயம் காரணமாக அனிதாவின் இறுதிச் சடங்கிற்கு செல்லவில்லை. இன்று முதல்வர் தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு முறையான அழைப்பு வரவில்லை. தொலைபேசி வாயிலாக எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தற்போது ஸ்லீப்பர் செல்களைச் சேர்த்தால் 35 சட்டமன்ற உறுப்பினர்கள் டிடிவி தினகரன் பக்கம் உள்ளனர். பழனிச்சாமி அணியினர் எங்களை சமதானப்பேச்சு வார்த்தைக்கு அழைத்தார்கள் என்பது தவறான தகவல். எங்களுக்கு மிரட்டல்கள்தாம்  வருகிறது’ என்று தெரிவித்தார்.                         

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close