Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருமுருகன் காந்தி வழக்கு - அரசின் தாமதத்தைக் கணக்கிட நீதிமன்றம் உத்தரவு

திருமுருகன் காந்தி

ஈழத்தமிழர்களுக்கு மெழுகுவத்தி அஞ்சலி செய்ததற்காகக் கைதுசெய்யப்பட்ட திருமுருகன் காந்தி உட்பட்ட நால்வர் மீதான குண்டர் சட்ட வழக்கு, மீண்டும் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுவருகிறது. இன்று விசாரணைக்கு வந்த அவ்வழக்கு, நாளை மறுநாள் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

சென்னை மெரினா கடற்கரையில், கடந்த மே 21-ம் தேதியன்று, இனப்படுகொலையில் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களுக்கான மெழுகுவத்தி அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கடந்த ஏழு ஆண்டுகளில், திடீரென இந்த ஆண்டு மட்டும் அந்த அஞ்சலி நிகழ்ச்சிக்குக் கெடுபிடிசெய்து, பங்கேற்றவர்களைக் கைதுசெய்தது போலீஸ். மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட, நான்கு பேரை மட்டும் சிறையில் அடைத்தது. தொடர்ந்து அவர்கள் மீது குண்டர் சட்ட வழக்கும் பதிவுசெய்யப்பட்டது. 

அதை எதிர்த்து, சென்னை மாவட்ட ஆட்சியராக வளாகத்தில் உள்ள குண்டர் சட்ட அறிவுரைக் கழகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. நான்கு பேர் மீதான குண்டர்சட்ட நடவடிக்கை சரியானதே என அது அறிவித்தது. 

இதற்கிடையில், திருமுருகன் காந்தி மற்றும் மூவரும் இந்தச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டது செல்லாது என உத்தரவிடுமாறு உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. 

இதில், அரசுத் தரப்பு பதில் அளிக்குமாறும் இறுதி விசாரணைக்குத் தயாராகுமாறும் உயர் நீதிமன்றம் நான்கு முறை அவகாசம் கொடுத்துவிட்டது. கடைசியாகக் கடந்த வாரம், புதிய அட்வகேட் ஜெனரல் பதவியேற்ற பின்னர் அவரே, நீதிபதிகள் செல்வம், கலையரசன் அமர்வு முன்பு நேர்நின்று, மேலும் அவகாசம் கேட்டார். அதை ஏற்று, இன்று பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இன்றும் கூடுதல் அவகாசம் தர வேண்டும் எனத் தலைமை வழக்கறிஞர் கேட்க, அரசு வழக்கறிஞர்கள் இந்த வழக்கை ஏற்கெனவே படித்துவிட்டார்கள் என்றும், மேலும் அவகாசம் தேவையில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். 

மேலும், இந்த வழக்கில் அரசுத் தரப்பு பதில் அளிக்க ஒவ்வொரு முறையும் செய்த தாமத காலத்தைக் கணக்கிட்டு வரும்படியும் நீதிபதிகள் அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டனர். 

அரசு விடுமுறை நாள்களையும் கணக்கிட வேண்டுமா என அரசுத் தரப்பில் கேட்டதற்கு, மொத்தத் தாமத காலத்தையும் கணக்கிட்டுத் தருமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close