Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அக்னி தீர்த்தக் கடலில் துணியை விட்டுச்செல்பவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு ! 

 

அக்னி தீர்த்தம்

 

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும் மேலும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது என்றும் கூறி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெண்ணிலா என்பவர் மனு ஒன்றை அளித்தார். அதில் " ராமேஸ்வரம் கோவிலில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை; கடலில் நேரடியாகக் கழிவு நீர் கலக்கிறது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அம்மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ராமேஸ்வரம் நகராட்சி மற்றும் அப்துல்கலாம் நினைவிடம் அமைந்துள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடை அமைக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கக் கூடாது. ராமேஸ்வரம் பகுதியில் இயங்கும் ஷேர் ஆட்டோக்களை வரைமுறைப்படுத்த காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனியார் விடுதிகள், நகராட்சிகள் ஆகியவற்றில் இருந்து வெளியாகும் கழிவுநீரை உரிய மறுசுழற்சி செய்யாமல் நேரடியாகக் கடலில் கலந்தால் தொடர்புடையவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி கடும் நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  பாம்பன்  பாலத்தில் உரிய மின் விளக்கு வசதிகள் செய்ய வேண்டும். மேலும், ராமேஸ்வரம் அக்னிதீர்த்தம் கடலில் பக்தர்கள் துணிகளைவிட்டுச் சென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close