Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கடலூரைக் கதிகலக்கிய சாராயக் கும்பல்: சோதனையில் சிக்கிய ரூ.3 லட்சம் மதுபாட்டில்கள்

புதுச்சேரியிலிருந்து கடலூருக்கு கடத்திவரப்பட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

மதுபானங்கள் கடத்தி வரப்படுவதாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு வந்த ரகசியத் தகவலையடுத்து, கடலூர் மதுவிலக்கு போலீஸார் ஆல்ப்பேட்டை சோதனைச் சாவடியில் இன்று அதிரடி வாகன சோதனை நடத்தினர். அப்போது, சோதனைச் சாவடியில் நிற்காமல் வேகமாக சென்ற காரின் மீது சந்தேகமடைந்து அந்தக் காரை துரத்திப்பிடித்து சோதனை செய்தனர். அப்போது, புதுச்சேரியிலிருந்து 350 லிட்டர் சாராயம் மற்றும் நூற்றுக்கணக்கான மதுப்பாட்டில்கள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது.  இவற்றின் மதிப்பு 3 லட்சம் ரூபாய் என்று தெரிவித்த காவல்துறையினர், மதுக்கடத்தலில் ஈடுபட்ட சுத்துகுளம் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரை கைதுசெய்து விசாரணை செய்துவருகின்றனர்.

.


"கடலூர் முதுநகரைப் பொறுத்தவரை அன்பழகன், சுந்தரி, அண்ணாதுரை, ஆறுமுகம் இவர்கள்தான் சாராய வியாபாரத்தில் கொடிகட்டிப் பறப்பவர்கள். இவர்கள் சாராயம் விற்பனை செய்த குற்றத்துக்காக பலமுறை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு வெளியில் வந்தவர்கள். இவர்களுக்கு மறைமுகமாக அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆதரவு உண்டு. அதனால்தான் அன்பழகன் என்பவர் இத்தொழிலில் 25 வருடமாக கோலோச்சி வருகிறார். கடலூர் முதுநகர் காவல்நிலையத்துக்கு சுந்தராஜன் என்பவர் புதியதாக பொறுப்பேற்ற பிறகு இவர்களின் ஆட்டம் அடங்கியுள்ளதாம். இப்போது பிடிப்பட்டிருப்பது ஆறுமுகத்தின் சாராயம். இவர் சில்லரை வியாபாரி கிடையாது, மொத்த வியாபாரி. இந்த சாராயத்தை யாருக்கு இவர் சப்ளை செய்ய கொண்டுவந்தார் என்றுதான் விசாரணை செய்துவருகிறார்கள்" என்கிறது போலீஸ் வட்டாரம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close