Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சொத்துக்குவிப்பு வழக்கில் வேதா இல்லம் இருக்கிறதா? - உயர் நீதிமன்றம் கேள்வி

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் போயஸ்கார்டன் வேதா இல்லம் இடம்பெற்றுள்ளதா என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 


ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் நினைவிடமாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 17-ம் தேதி அறிவித்தார். அவரது அறிவிப்பைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பணியைத் தொடங்கினர். போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்குவதை எதிர்த்து, திருச்சியைச் சேர்ந்த தங்கவேலு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுவில், ’உச்ச நீதிமன்றத்தால் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவர் ஜெயலலிதா. சொத்துக்குவிப்பு வழக்கில் போயஸ் கார்டன் இல்லம் இடம்பெற்றிருந்தது. அங்கு சட்டவிரோதப் பணப்பரிமாற்றங்கள் நடைபெற்றிருந்தன. அவரது வீட்டை அரசு சார்பில் நினைவிடமாக்குவது தவறான முன்னுதாரணமாகிவிடும். எனவே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும்' என்று கோரியுள்ளார். இந்த மனு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சொத்துக்குவிப்பு வழக்கில் வேதா இல்லம் இடம்பெற்றிருக்கிறதா என்று அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்தக் கேள்விக்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர், சொத்துக்குவிப்பு வழக்கில் போயஸ் கார்டன் வேதா இல்லம் இடம்பெறவில்லை என்றும், இதுதொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவைத் தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அரசுக்கு அவகாசம் அளிக்கும் வகையில், வழக்கு விசாரணையை செப்டம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close