Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அனிதா மரணத்தில் நீதி விசாரணை - முதல்வரை சந்தித்த கிருஷ்ணசாமி

மாணவி அனிதா மரணம்குறித்து நீதிவிசாரணை நடத்த வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கிருஷ்ணசாமி மனு அளித்துள்ளார். 

krishnasamy
 

அனிதா மரணம்குறித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறிவரும் கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. நீட் தேர்வுக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வரும் கிருஷ்ணசாமி, அனிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகிறார்.

இந்நிலையில், முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்த கிருஷ்ணசாமி, அனிதா மரணத்துக்கு நீதி விசாரணைக் கோரி மனு அளித்துள்ளார். முதல்வரை சந்தித்தப்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கிருஷ்ணசாமி “நீட் தேர்வில் மாணவி அனிதா 86 மதிப்பெண் மட்டுமே பெற்றார். மருத்துவ சீட் கிடைக்கவில்லை என்பதால் வேளாண்மை படிப்பில் சேர உள்ளதாக அனிதா சொல்லி வந்தார். நீதிமன்றம் வரை சென்ற தைரியமான பெண் எப்படி திடீரென தற்கொலை செய்துகொள்ள முடியும்.  அரசியல் நோக்கத்துக்காக அனிதாவை யாரேனும் தவறாக வழிநடத்தி இருப்பார்களோ என சந்தேகம் உள்ளது. சிவசங்கர், கஜேந்திர பாபு உள்ளிட்டோர் அனிதாவை டெல்லி வரை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இதனிடையே, மு.க.ஸ்டாலின் அனிதாவை சந்தித்துள்ளார். இதுபற்றியெல்லாம் எந்த ஊடகத்திலும் செய்தி வெளியாகவில்லை. அரசியல் நோக்கத்துக்காக, நீட் தேர்வை எதிர்க்க அனிதாவை தி.மு.க. பயன்படுத்தி உள்ளனர் என்னும் சந்தேகம் உள்ளது. அனிதா தற்கொலை செய்துகொள்ள யாரோ தூண்டியிருக்கிறார்கள்.  இது தற்கொலையா என்னும் சந்தேகமும் உள்ளது. இந்தப் பெண்ணின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் . இதுகுறித்து முதல்வரிடம் மனு அளித்துள்ளேன். உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் மனு அளிக்க உள்ளேன்” என்றார்.

கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி, 'கிருஷ்ணசாமி தன்னுடைய மகள் மருத்துவ சீட் பெறுவதற்குப் போதிய மதிப்பெண் எடுக்காததால், ஜெயலலிதாவிடம் உதவி கேட்டதாகவும் ஜெயலலிதா உதவிசெய்ததாகவும்’ குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் கிருஷ்ணசாமியிடம் கேள்வியெழுப்பினர். செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் சொல்லாமல் சிரித்து மழுப்பினார் கிருஷ்ணசாமி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close