Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அனிதா தற்கொலை விவகாரம் – ஆசிட் குடிக்க முயன்ற மாணவர்கள்!

ரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலையை அடுத்து தமிழகமெங்கும் பல்வேறு போராட்டங்களை மாணவர்களும் இளைஞர்களும் முன்னெடுத்து வருகின்றனர். புதுச்சேரியில் இரண்டாவது நாளாக மாணவர்கள் நடத்தியப் போராட்டத்தால் ஸ்தம்பித்துப் போனது நகரம்.

அனிதா

மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும், ’நீட்’ தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தியும் நேற்று (4.9.2017) இரவு புதுச்சேரி-கடலூர் சாலையில் இருக்கும் நீதிமன்றம் எதிரில் உள்ள ஏ.எப்.டி மைதானத்தில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் கையில் மெழுகுவத்தியுடன் அஞ்சலி செலுத்தக் குவிந்தனர். அந்த இடத்தில்தான் ஏற்கெனவே ஜல்லிக்கட்டுக்கான தொடர் போராட்டம் நடைபெற்றது என்பதால் மீண்டும் அப்படி நிகழ்ந்துவிடுமோ என்று பதறிப்போனது காவல்துறை. அதனால் முதலில் மாணவர்களிடம் கலைந்து செல்லுமாறு பேச்சுவார்த்தை நடத்தினர் காவல்துறையினர். மாணவர்கள் அதற்குக் கட்டுப்படாததோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அதில் ஒருசில மாணவர்கள் கழிவறையைச் சுத்தப்படுத்தும் ஆசிட்டைக் குடிக்க முயற்சி செய்தனர். அதைப் பறித்து அப்புறப்படுத்திய காவல்துறையினர் மாணவர்களை வலுக்கட்டாயமாகக் காவல்துறை வாகனத்தில் ஏற்றி கோரிமேடு சமுதாயக் கூடத்தில் அடைத்தனர்.

அனிதா

இதையடுத்து, தி.மு.க-வின் தெற்கு மாவட்டச் செயலாளர் சிவா எம்.எல்.ஏ, காவல்துறையினரிடம் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நள்ளிரவில் அந்த மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், மாணவர்கள் கைதுசெய்யப்பட்ட சம்பவம் மற்ற மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதனால் இரண்டாவது நாளாக இன்று அனைத்துப் பள்ளி, கலை மற்றும் சட்டக் கல்லூரியைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு புதிய பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ள சுதேசிமில் வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ’நீட்’ தேர்வுக்கு நிரந்தரத் தடை வேண்டும் என்றும் அனிதாவின் தற்கொலைக்கு நீதி வேண்டும்’ என்றும் கோஷம் எழுப்பினர். அதேபோல தாகூர் கலைக்கல்லூரி, அரசு பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு ராஜீவ்காந்தி சிலை சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் தொடர் போராட்டத்தால் புதுச்சேரியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close