Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆளுநரை சந்திக்கும் டி.டி.வி.தினகரன்!

டி.டி.வி.தினகரன், தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்களுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை செப்டம்பர் 7-ம் தேதி சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் தனித்தனியாகக் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி கடிதம் அளித்தனர். மேலும், முதலமைச்சரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களின் கோரிக்கைக்கு ஆளுநர் தரப்பில் இருந்து இதுவரை நேரடியான பதில் கிடைக்கவில்லை. இதையடுத்து, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் தலைமையில் ஆளுநரைச் சந்தித்த தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆளுநரைச் சந்தித்து அரசுப் பெரும்பான்மையை இழந்துவிட்டதாக முறையிட்டனர். ஆனால், முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராகக் கடிதம் கொடுத்த எம்.எல்.ஏ-க்கள் அ.தி.மு.க-விலிருந்து விலகவில்லை. எனவே இது அவர்களின் உட்கட்சி விவகாரம், அதில் தலையிட முடியாது என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூறியதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடந்த எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் 111 பேர் மட்டுமே கலந்துகொண்டதாகக் கூறப்பட்டது. இதனால், அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதை அவர்களே ஒப்புக்கொண்டிருப்பதாக டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவை டி.டி.வி. தினகரன் செப்டம்பர் 7-ம் தேதி சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்களுடன் ஆளுநரைச் சந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக தினகரன் வலியுறுத்துவார் என்று தெரிகிறது. ஆளுநர் மாளிகையிலும் சந்திப்புக்கான நேரம் ஒதுக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close