Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திவாகரனை எதிர்க்கும் அமைச்சர் காமராஜ்... இது திருவாரூர் மல்லுக்கட்டு!

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தை கைப்பற்றுவதில் தினகரன், எடப்பாடி அணிகளுக்கு இடையே கடும்போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க-வில் அடுத்து என்ன நடக்குமோ என்ற கேள்விதான் அனைவரின் எதிர்பாப்பாக உள்ள சூழ்நிலையில், சசிகலாவின் சொந்த மாவட்டமான திருவாரூரில் நன்னிலம் ஒன்றிய அலுவலகத்தை யார் கைப்பற்றுவது என தினகரன் அணியினரும், எடப்பாடி அணியினரும் போட்டிபோடுவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டு வருகிறது. 

காமராஜ்
 

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வடக்கு ஒன்றியச் செயலாளராக அன்புவும் தெற்கு ஒன்றியச் செயலாளராக ராமகுணசேகரன் இருந்து வந்தனர். இந்நிலையில், கடந்த 23-ம் தேதி உணவுத்துறை அமைச்சர் காமராஜை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார் தினகரன். இதையடுத்து, புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ் நன்னிலம் ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தார். அப்போது திவாகரன் மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து அவருக்கு வரேவேற்பு அளித்தனர். அப்போது, அங்கே வந்த அமைச்சர் காமராஜின் ஆதரவளர்களுக்கும் தினகரன் அணி ஆதரவாளர்களுக்குமிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். தாசில்தாரும் அங்கு விரைந்து சென்று இரு அணிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். இரு அணியினரும் சமாதான பேச்சுக்கு உடன்பாடு ஏற்படாததால் எப்போது வேண்டுமானாலும் இரு அணிகளுக்குகிடையேயான மோதல் வெடிக்கலாம் என்ற நிலையே நிலவுகிறது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close