Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உடுமலை சங்கர் கொலை வழக்கு: அரசுத்தரப்பு வாதம் நடைபெற்றது..!

உடுமலை சங்கர் மற்றும் கௌசல்யா

உடுமலை சங்கர் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று திருப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் சாதி மறுப்புத் திருமணம் செய்த பொறியியல் கல்லூரி மாணவர் சங்கர் கூலிப்படை கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவி கௌசல்யாவையும் அந்த கும்பல் வெட்டியது. இதில் படுகாயமடைந்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உடல் நலம் தேறினார்.

பொதுமக்கள் முன்னிலையில் வெட்டிச் சாய்க்கப்பட்ட சங்கரின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாயார் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை மற்றும் செல்வக்குமார், மதன் என்ற மைக்கேல், பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஜெகதீசன், பழநியைச் சேர்ந்த மணிகண்டன், கலை தமிழ்வாணன், பட்டி வீரன்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன், தன்ராஜ் மற்றும் கல்லூரி மாணவர் பிரசன்னா ஆகிய 11 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

சங்கர் கொலை வழக்கு திருப்பூர் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வழக்குரைஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள் யாரும் ஆஜராகாத சூழ்நிலை நிலவியது. எனவே, வழக்கில் கைதுசெய்யப்பட்ட நபர்கள் அனைவரும் ஆஜர்படுத்தப்பட்டால் மட்டுமே அரசுத் தரப்பு தங்களின் வாதத்தை நடத்த முடியும் என்ற கட்டாயம் ஏற்பட்டு இருந்ததால், நீண்ட நேரம் கழித்த பின்னரே கைதுசெய்யப்பட்ட அனைவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதையடுத்தே அரசுத் தரப்பு வாதம் தொடங்கி நடைபெற்றது. மூத்த வழக்குரைஞர் சங்கர நாராயணன் தலைமையில் வழக்குரைஞர்கள் ரூபன், செந்தில்குமார் உள்ளிட்ட நால்வர் குழு தமிழக அரசுத் தரப்பில் ஆஜராகி வாதாடினர். இதையடுத்து, சங்கர் கொலை வழக்கின் விசாரணை செப்டம்பர் 6 -ம் தேதி (இன்று) ஒத்தி வைக்கப்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close