Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

`உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கையை வெளியிடுக'- தேர்தல் ஆணையத்துக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

'உட்கட்சி பிரச்னைக்காக – உள்ளாட்சி அமைப்புகளை முடக்கும் ‘குதிரை பேர’ அரசின் முயற்சிக்கு மாநில தேர்தல் ஆணையம் இடமளிக்காமல் உயர் நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டும்' என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்

உள்ளாட்சித் தேர்தல் குறித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'செப்டம்பர் 18-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு, நவம்பர் 17-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும், என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அளித்திருக்கும் தீர்ப்பை வரவேற்கிறேன். உள்ளாட்சி ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் உயர்நீதிமன்றத்தின் இந்த மிக முக்கியமான தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ‘குதிரை பேர’ அரசின் அடாவடிப் போக்குக்கு ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்திருக்கிறது.

வறட்சி, குடிநீர் பிரச்னை போன்ற அனைத்துக்குமே உள்ளாட்சி அமைப்புகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகம் இருந்தால்தான் தீவிரமாக நடவடிக்கை எடுத்து, மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க முடியும். ஏற்கெனவே மாநிலத்தில் உள்ள ‘குதிரை பேர’ அரசு நிலை தடுமாறி, அரசு நிர்வாகம் முற்றிலும் சீர்குலைந்துள்ள இந்தநேரத்தில், உள்ளாட்சி அமைப்புகளாவது கிராமங்களிலும், நகரங்களிலும், மாநகரங்களிலும் மக்களுக்குத் தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். ஆகவே, வருகிற செப்டம்பர் 18-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். உள்ளாட்சி ஜனநாயகத்தை மேலும் முடக்கும் ‘குதிரை பேர’ அரசின் எந்த நடவடிக்கைக்கும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இடமளிக்காமல், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உடனடியாக செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்' என குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close