Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குமரி மாவட்டத்தில் துணை தாசில்தாரை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

சலவைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில், அரசால் வழங்கப்பட்ட இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயலும் துணை தாசில்தாரை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்த்தவர்களை போலீஸார் கைதுசெய்தனர்.         


           

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருகே அக்கரை பகுதியில் சுமார் 76 சலவைத் தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு 1979-ம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் பத்தாயிரம் ரூபாய் செலவில் காப்பக கட்டடம் கட்டிக் கொடுத்தார். பல வருடங்களுக்கு மேலாக சலவைத் தொழிலாளர்கள், உலர வைத்த துணிகள், தங்கள் சலவை பொருள்களை அந்த காப்பக கட்டடத்தில் வைத்து இன்றும், பயன்படுத்தி வருகின்றனர்.

அவர்கள் பயன்படுத்தி வந்த சலவை தொழில் காப்பகக் கூடத்தை அந்தப் பகுதியில் வசிக்கும் குமரி மாவட்ட வருவாய்த் துறையில் துணை தாசில்தாராக பணியாற்றும் ஆறுமுகம் என்பவரின் வீட்டுக்கு கார் செல்வதற்காக அரசு அதிகாரிகளிடம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் காப்பக கூடத்தை இடித்து அகற்ற முயற்சி செய்துவருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதனால்  ஆறுமுகத்தை கண்டித்தும், அவரைப் பணி நீக்கம் செய்யக்கோரி குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிட முயன்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்தி போலீஸார் கைதுசெய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close