Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்று முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்..!

'வாகன ஓட்டிகள், அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்' என்ற உத்தரவு, இன்று முதல் அமலுக்கு வருகிறது.


'வாகன ஓட்டிகள், செப்டம்பர் 1-ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்' என்று போக்குவரத்துக் காவல்துறை சமீபத்தில் உத்தரவிட்டது. அசல் ஓட்டுநர் உரிமம் இல்லையென்றால், 500 ரூபாய் அபராதம் மற்றும் மூன்று மாதம் சிறைத் தண்டனை என்று அறிவித்தது. இந்த உத்தரவு, வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. காவல்துறையின் இந்த உத்தரவுக்கு எதிராக டிராஃபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இதனையடுத்து, செப்டம்பர் 1-ம் தேதியிலிருந்து அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்பது செப்டம்பர் 5-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. மேலும், இதுதொடர்பான வழக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டது. அந்த வழக்கில் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது. வாகன ஓட்டிகள், அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தால் மட்டும் வசூல்ராஜாக்களின் வேட்டையிலிருந்து தப்பிக்க முடியும். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close