Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

 ஊதியமில்லை; கூலி வேலை! பரிதாபத்தில் கூட்டுறவு வீட்டுவசதி சங்க ஊழியர்கள்

வங்கிகளை அணுக முடியாத சாதாரண மக்களும் வீட்டுக்கடன் பெறுவதற்காக உருவாக்கப்பட்டதுதான், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள். கூட்டுறவு சங்க இணையம் மூலம், தமிழகத்தில் 800-க்கும் மேற்பட்ட சங்கங்கள் இயங்கிவந்தன. இந்தச் சங்கங்கள் மூலம்  2 ஆயிரம்கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டு, சிறப்பாகச் செயல்பட்டுவந்தது. தி.மு.க, அ.தி.மு.க  அரசுகள், கடன்களையும், அபராத வட்டியையும் தள்ளுபடிசெய்ததால், வீட்டுவசதி சங்கங்களை லாபமாக நடத்தமுடியவில்லை. தள்ளுபடிக்கான இழப்பீட்டை சங்கங்களுக்கு அரசு வழங்கவில்லை.

அது மட்டுமல்லாமல், பல சங்கங்களின் செயலாளர்களும் அலுவலர்களும் மக்களிடம் வசூல்செய்த பணத்தை அரசுக்குச் செலுத்தாமல் ஏமாற்றினார்கள். இதனால், மக்கள் கடனைச் செலுத்த பயந்தார்கள். ஒருசிலரின் தவறுகளால், சங்கங்களில் பணிபுரியும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல வருடங்களாக சம்பளம் இல்லாமல் கௌரவத்துக்காக வேலை செய்துவருகிறார்கள். காலியாக உள்ள அரசுத் துறைகளுக்கு மாற்றுங்கள் என்று கோரிக்கை வைத்தும் அரசு கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், பலர் கடன்காரர்களாகிவிட்டனர், இன்னும் சிலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர், கூலி வேலைக்குச் சென்றுவருகிறார்கள். இன்னும் சிலரோ, அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் புலம்பிவருகிறார்கள். இப்படி ஒரு பிரச்னை இருப்பது தெரியாமல் அரசு செயல்பட்டுவருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close