Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கௌரி லங்கேஷ் கொல்லப்பட்ட விவகாரம்..! சென்னையில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

கௌரி லங்கேஷ் கொல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து, பத்திரிகையாளர் சங்கம் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பெங்களூரில் இந்துத்துவா அமைப்புகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாக எழுதிவந்த மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செயலுக்கு எதிராக, பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். பத்திரிகையாளர்களும் இந்தச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். கௌரி லங்கேஷ் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் கொலைக் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும் பத்திரிகையாளர்கள் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தைச் சேர்ந்த முக்கியப் பத்திரிகையாளர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.

சேலத்திலும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சேலத்திலுள்ள அனைத்துப் பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

மேலும், இந்தியாவில் தொடந்து ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் இருந்துகொண்டிருக்கிறது. அதனால் ஊடகவியலாளர்கள் பாதுகாப்புக்கென்று தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close