Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருச்சியில் கிருஷ்ணசாமிக்கு எதிராகப் போராட்டம்!

நீட் தேர்வுக்கு எதிராக, உச்ச நீதிமன்றம் வரை சட்டப் போராட்டம் நடத்திய மாணவி அனிதாவின் மரணத்துக்குக் காரணமான மத்திய-மாநில அரசுகளையும் அனிதாவின் மரணத்தைக் கொச்சைப்படுத்திவரும் கிருஷ்ணசாமியைக் கண்டித்தும், திருச்சி நீதிமன்ற வளாகத்துக்கு முன்பு, இன்று மக்கள் மறுமலர்ச்சிக் கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சியில் கிருஷ்ணசாமிக்கு எதிராகப் போராட்டம்மக்கள் மறுமலர்ச்சிக் கழகத்தின் நிறுவனர், வழக்கறிஞர் பொன்.முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், ஏழை மாணவர்களின் எதிர்காலத்தைப் பறிக்கும் நீட் தேர்வுக்கு எதிராகவும், தமிழின மக்களின் எதிரி மோடி, தமிழக மக்களின் துரோகி முதல்வர் எடப்பாடி பழனிசாமி எனக் கோஷமிட்டவர்கள், அனிதாவின் இறப்பு பற்றி விமர்சித்தும் வருவதாகக் குற்றம் சாட்டி, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் உருவ பொம்மையைத் தூக்கிலிட்டும், நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்திக் கோஷமிட்டதோடு, அந்த உருவ பொம்மைகளை எரிக்க முயன்றனர். அதைப் போலீஸார் தடுக்க முயலவே, இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, மக்கள் மறுமலர்ச்சிக் கழக நிர்வாகிகள், சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் சட்டம் ஒழுங்குப் பிரச்னை உண்டாகும் என நினைத்த போலீஸார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரைக் கைதுசெய்தனர்.

இதுகுறித்து பொன்.முருகேசன், “நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி உயிர் இழந்த மாணவி அனிதாவின் இறப்பைக் கொச்சைப்படுத்தும் வகையிலும், பேட்டி கொடுத்தும் தொடர்ந்து பட்டியலின மக்களுக்கு எதிராகச் செயல்பட்டுவரும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியை மக்கள் மறுமலர்ச்சிக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. நல்லா இருந்த அவர், . பட்டியலின மக்களுக்கு எதிராகத் தேவை இல்லாமல் பிரச்னை உண்டாக்க நினைக்கிறார். அனிதாவின் இறப்பை தேவை இல்லாமல் பேசி, சர்ச்சையைக் கிளப்பி, குழப்பத்தை உண்டாக்குகிறார்கள். ஏழை மாணவர்களின் எதிர்காலத்தைப் பறிக்கும் நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும். கிருஷ்ணசாமி, தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close