Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கல்லூரி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு... நீட் தேர்வுக்கு எதிராகத் தொடரும் போராட்டம்!

நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதாவின் மரணம், நாட்டின் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் நுழைவுத் தேர்வு முறையை ரத்துசெய்ய வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் இளைஞர்கள் பெரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அனிதாவின் மரணம் பற்றிய தகவல் வெளியான சமயத்தில் இருந்தே திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அரசியல் இயக்கங்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் போராட்டங்களைத் தொடங்க, கடந்த சில நாள்களாக மாவட்டத்தில் அமைந்திருக்கும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் நீட்டுக்கு எதிரான போராட்டங்களில் தங்களை இணைத்துக்கொண்டார்கள்.

அதனடிப்படையில் திருப்பூர் மாநகரில் இயங்கிவரும் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கல்லூரி மாணவிகளும், சிக்கண்ணா அரசுக் கலைக் கல்லூரி மாணவ மாணவிகளும் இன்று அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு, நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களை நடத்தினர். காலையில் இருந்தே வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரியின் நுழைவு வாயில் பகுதியில் அமர்ந்த மாணவர்கள், நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியும், மத்திய மாநில அரசுகளின் செயல்களுக்குக் கண்டனங்களைத் தெரிவித்தும் போராட்ட முழக்கமிட்டனர். போராட்டத்தின் ஒருபகுதியாக நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மாணவி அனிதாவுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close