Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாட்டு வண்டிப் பந்தயத்தில் மல்லுக்கட்டிய காளைகள்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே, பெரியகாரை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நடுவூர் நாச்சியம்மன்கோயில் ஆவணி சுற்றுப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.

இதில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 23 ஜோடி பந்தய மாடுகள் கலந்துகொண்டன. இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் பந்தயத்தில், பெரிய மாட்டுக்கு 8 மைல் தூரமும், சின்ன மாட்டுக்கு 6 மைல் தூரமும் பந்தய தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பெரிய மாடு மற்றும் சிறிய மாடு பந்தயத்தில் மதுரை மாவட்டம், பாண்டிக்கோயில் பாண்டியராஜன் மாடுகள் முதலாவதாக வந்து வெற்றிபெற்று, அனைவரது பாராட்டுகளையும் பெற்றது.

பெரிய மாட்டில் இரண்டாவதாக, இராமநாதபுரம் மாவட்டம் மருங்கூரைச் சேர்ந்த உமர் மாடுகளும் சிறிய மாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையைச் சேர்ந்த அக்தர் மாடுகளும், இரண்டாவதாக வந்தன. முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாடுகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பெரியகாரை கிராம நகரத்தார்கள் சார்பில் மரியாதை செய்யப்பட்டு, பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. இந்த மாட்டு வண்டிப் பந்தயத்தைக் காண தேவகோட்டை, பெரியகாரை, கோட்டூர், பாவனக்கோட்டையைச் சோ்ந்த பார்வையாளர்கள், சாலைகளின் இரு புறமும் திரளாக நின்று கண்டு ரசித்தனா்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close