Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீட் தேர்வை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த வாலிபர் திடீர் மயக்கம்!

நீட் தேர்வை எதிர்த்து தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதா மரணத்துக்கு நீதி விசாரணை கேட்டு திருச்சி கி.ஆ.பெ.வி மருத்துவக்கல்லூரி எதிரில் அனைத்திந்திய மாணவர் மன்றம் மற்றும் திருச்சி மாவட்ட ஜல்லிக்கட்டுப் போராட்டக் குழுவைச் சேர்ந்த தினேஷ், ஜீவானந்தம், சேக்அப்துல்லா, சூர்யா, ரியாத் நிஷா உள்ளிட்ட 5 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போரட்டம் இருந்து வருகின்றனர்.

 5ம் நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தைச் சேர்ந்த சூர்யா சற்றுமுன் மயக்கம் ஏற்பட்டதால் மயங்கினார். அதனைத் தொடர்ந்து மயக்கமடைந்த சூர்யா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மீதமுள்ளவர்கள் போராட்டத்தைத் தொடர்வதாலும், இவர்களுக்கு ஆதரவு அதிகரித்து வருகின்றது. நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகம் முழுக்கப் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், திருச்சி ஈ.வே.ரா கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Related Tags

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close