Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அஜித்தான் நிஜமான சர்வைவா' - வைரலாகிவரும் நடிகை கஸ்தூரியின் ட்வீட்!

கஸ்தூரி


ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தொடங்கி, ரஜினியின் அரசியல் என்ட்ரி வரை ஒவ்வொரு விஷயத்தையும் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவது நடிகை கஸ்தூரியின் அன்றாடப் பழக்கம். அவருடைய ஒவ்வொரு ட்விட்டைப் பற்றியும் பாராட்டும், விமர்சிக்கும் தன் ஃபாலோயர்களுக்கு, அவர் பதிலளிக்கவும் தவறுவதில்லை. அப்படி சமீபத்தில் அவர் பதிவிட்டிருந்த ட்விட்டரைப் பலரும் ஷேர் செய்து வருவதோடு, விமர்சனத்துக்கும் உள்ளாகிவருகிறது. 

கஸ்தூரி


பொதுவாக, தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்திலிருந்து எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என இரண்டு பிரிவு ரசிகர்களாக இருந்து வருகிறார்கள். அதேபோலத்தான், இந்தத் தலைமுறையும் விஜய், அஜித் என இரண்டு பிரிவு ரசிகர்களாக இருந்து, ரசிகர் மன்றம் மூலமாக நல்லது செய்வது தொடங்கி அடித்துக்கொள்வது வரை நடந்துவருகிறது. இப்படி தங்களுக்குள் போட்டியாக இருக்கும் நேரத்தில்,  ட்விட்டரில் அவரது ரசிகர் ஒருவர், உங்களுக்கு நடிகர்கள் விஜய், சூர்யா, அஜித் இதில் யாரைப் பிடிக்கும் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், இந்த மூவரில் அஜித்தான் பிடிக்கும். மற்ற இருவரும் தங்களது அப்பா மூலம் பிரபலம் ஆனவர்கள். ஆனால், உண்மையில் அஜித் தான் சர்வைவா எனக் கூறியுள்ளார். இந்த ட்விட்டருக்குப் பலரும் ஆதரவையும், எதிர்ப்பையும்  காட்டி வருகிறார்கள்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close