Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பயங்கரவாதிகளிடமிருந்து பத்திரிகையாளர்களைக் காப்பாற்ற வேண்டும்! - கோவையில் முழங்கிய பத்திரிகையாளர்கள்

கோவை பத்திரிகையாளர்கள்

பெங்களூருவில் மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கோவையில் அனைத்துப் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஏராளமான பத்திரிகையாளர்கள், பெண் ஊடகவியலாளர்கள் பங்கேற்று, இந்தியாவில் அண்மைக்காலமாகப் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். 

ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்து பத்திரிகையாளர் ஏ.ஆர்.பாபு பேசும்போது, கருத்துச் சுதந்திரத்தைக் கருத்துகளால் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும் என்றும், அதைவிட்டுவிட்டு மாற்றுக் கருத்துகளை எதிர்கொள்ளத் திராணி இல்லாதவர்கள் ஊடகவியலாளர்களைச் சுட்டுக்கொல்வது ஜனநாயக விரோதமானது மட்டுமல்ல மனிதத் தன்மையும் அற்றது.

பகுத்தறிவாளர் எம்.எம்.கல்புர்கி, சமூக சீர்திருத்தவாதி கோவிந்த் பன்சாரே ஆகியோர் கொல்லப்பட்ட முறையிலேயே அதாவது வெகு அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் கௌரி. எனவே, இதுபோன்ற வலதுசாரி பயங்கரவாதிகளிடம் இருந்து பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்காக நாடு முழுவதற்கும் உறுதியான தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றார் அவர். மேலும், அரியலூர் மாணவி அனிதா மரணத்துக்குக் காரணமாக இருந்த நீட் தேர்வைத் தமிழகத்தில் முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். தமிழகம் காலம் காலமாக காத்து வரும் சமூக நீதியைத் தமிழக அரசு காப்பாற்ற வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர்கள் வலியுறுத்தினர். இறுதியில் படுகொலை செய்யப்பட்ட கௌரி லங்கேஷ், அரியலூர் அனிதாவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் பல்வேறு பத்திரிகைகள், காட்சி ஊடகங்களின் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், ஒளிப்பதிவுக் கலைஞர்கள், உதவி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close