Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிறுமுகை வனப்பகுதியில் மான் வேட்டை - 4 பேர் கைது

கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்ட 4 பேரை வனத்துறையினர் கைதுசெய்தனர். 


சிறுமுகை வனச்சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் சுருக்கு வைத்து மான் வேட்டையாடப்படுவதாக வனக் காவலர்களுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறுமுகை வனச்சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அப்போது, பெத்திக்குட்டை காப்புக் காடு பகுதியில் சுறுக்கு வைத்து மான் வேட்டையாடிய 4 பேரை வனக்காவலர்கள் கைதுசெய்தனர். இவர்கள் இலுப்பநத்தம் பகுதியைச் சேர்ந்த மோகன் ராஜ், அரவிந்த் சூர்யா, செந்தில் குமார் மற்றும் ஆலாங்கொம்பு பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் மீது வனச் சட்டம் 1882 பிரிவு 21- டி-யின்படி வனப்பகுதியில் அத்துமீறி சென்றது மற்றும் வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972 பிரிவு 9-ன் படியும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close