Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜாக்டோ ஜியோ போராட்டக்குழுவை உடைக்க முடியாமல் திணறும் தமிழக அரசு!

மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதிகேட்டு பல்வேறு அமைப்பினர், மாணவர்கள் நடத்தும் போராட்டங்களை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசும் காவல்துறையும்  திணறிக்கொண்டிருக்கும் சூழலில், நாளை முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள  அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோவின் போராட்டத்தை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பத்து லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜாக்டோ - ஜியோ போராட்டம்

இந்த நிலையில், போராட்டக்குழுவிலுள்ள சில நிர்வாகிகளை அமைச்சர்கள் சந்திக்க விரும்புகிறார்கள் என்று நூல்விட்டுப் பார்த்துள்ளனர் அரசு தரப்பு. ஆனால், அதற்கு அவர்கள் மசியவில்லையாம். இதையடுத்துதான் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத்தலைவர் சண்முகராஜா, 'முதல்வர் எங்களை அழைத்துப் பேசியுள்ளார். பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால், ஜாக்டோ-ஜியோ  தொடங்கும் போராட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம்' என்று அறிவித்துள்ளார். 'சண்முகராஜாவின்  அறிவிப்பைப் பார்த்து குழம்பவேண்டாம். ஆரம்பத்திலிருந்தே இந்த சங்கத்தினர், எங்களோடு இணைந்து போராடவில்லை. பெரும்பாலும் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே அவர்கள் இருந்துவருகிறார்கள். நாளை நடக்கும் எங்கள் போராட்டத்தில் அனைத்து சங்கங்களும் கலந்துகொள்ளும்' என்கிறார்கள் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close