Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மேட்ரிமோனி டாட்காம் நிறுவனத்தின் ஐ.பி.ஓ செப்டம்பர் 11-ம் தேதி வெளியீடு

ஆன்லைனில் திருமணச் சேவைகளை நடத்தி வரும் மேட்ரிமோனி டாட்காம் நிறுவனம், அதன் பொதுப் பங்குகளை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

மேட்ரிமோனி

மேட்ரிமோனி டாட்காம் நிறுவனம், பாரத்மேட்ரிமோனி டாட்காம், எலைட்மேட்ரிமோனி, கம்யூனிட்டிமேட்ரிமோனி, சாதி, மதம் சார்ந்த பெங்காலிமேட்ரிமோனி, கன்னடா மேட்ரிமோனி, தமிழ்மேட்ரிமோனி போன்ற பல பெயர்களில் திருமணச் சேவைகளைச் செய்துவருகின்றது. இதர திருமண சேவைகளான மேட்ரிமோனி போட்டோகிராபி, மேட்ரிமோனி கிஃப்ட்ஸ், மேட்ரிமோனி டைரக்டரி மற்றும் மில்லியன் வெட்டிங் பிக்ஸ் உள்ளிட்ட பல சேவைகளையும் செய்துவருகிறது. 

பல மாதங்களுக்கு முன்பே ஐ.பி.ஓ வெளியிடுவதற்கு செபியிடம் பாரத் மேட்ரிமோனி டாட்காம் விண்ணப்பித்தது. ஆனால், அந்நிறுவனத்தால் திட்டமிட்டபடி ஐபிஒ-வை கொண்டுவர முடியவில்லை. மேட்ரிமோனி டாட்காம் நிறுவனத்தின் கீழ் இயங்கும் பாரத் மேட்ரிமோனி டாட்காமுக்கு பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி பொதுப் பங்கு வெளியிட அனுமதி அளித்ததை அடுத்து மேட்ரிமோனி டாட்காம் நிறுவனம் ஐபிஓ-வை வெளியிட உள்ளது. ஒரு பங்கின் விலை ரூ.983 முதல் 985 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த பொதுப் பங்கு வெளியீடு மூலம் ரூ.130 கோடி வரை நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளது மேட்ரிமோனி டாட்காம். ஐ.பி.ஓ மூலம் திரட்டப்படும் நிதி சென்னையில் புதிய அலுவலகம் கட்டுவது மற்றும் விரிவாக்கப்பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என அதன் நிறுவனர் முருகவேல் ஜானகிராமன் தெரிவித்துள்ளார். ஐ.பி.ஓ வரும் செப்டம்பர் 11-ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 13-ம் தேதி முடிவடைகிறது. இதில் சில்லறை விற்பனை மற்றும் பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளிலிருந்து ஒவ்வொரு பங்குகளுக்கும் 98 ரூபாய் தள்ளுபடி அளிக்கப்படும். குறைந்தபட்ச பங்கு ஒதுக்கீடு 15 பங்குகள் மற்றும் அதற்கு மேல் 15 பங்குகளின் கூட்டுத்தொகையாக வழங்கப்படும். செப்டம்பர் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை பாரத்மேட்மோனி ஐ.பி.ஓவுக்கு விண்ணப்பிக்கலாம். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close