Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருப்பூரில் டிராக்டர் ஜப்தி செய்யப்பட்டதால் விவசாயி தற்கொலை!

திருப்பூரில் வங்கி அதிகாரிகளால் டிராக்டர் ஜப்தி செய்யப்பட்டதால் விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.

பல்லடம், மலையம்பாளையத்தைச் சேர்ந்தவர் வெள்ளியங்கிரிநாதன். சேலத்தில் இயங்கி வரும் கோடாக் மகேந்திரா வங்கிக் கிளையில் டிராக்டர் வாங்குவதற்கு கடன் பெற்றுள்ளார். தவணையை முறையாகத் திருப்பிச் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. வங்கி அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். தீர்ப்பில், டிராக்டரை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. 

வங்கி அதிகாரிகள் வெள்ளியங்கிரிநாதனின் வீட்டுக்குச் சென்று முறையான ஆவணங்களைக் காட்டி டிராக்டரை ஜப்தி செய்தனர். பல்லடம் போலீஸ் ஸ்டேஷன் அருகே வங்கி அதிகாரிகளிடம் வெள்ளியங்கிரிநாதன் மீண்டும்  சமாதானம் பேசினார். நிலுவைத் தொகையை கட்டினால் மட்டுமே டிராக்டரைத் திருப்பித் தருவோம் என்று வங்கி அதிகாரிகள் கறாராக கூறியுள்ளனர். 

மனமுடைந்த வெள்ளியங்கிரிநாதன், தயாராக வைத்திருந்த விஷத்தை அருந்தி அதே இடத்தில் மயங்கி விழுந்தார். பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் வெள்ளியங்கிரிநாதன் இறந்து போனார். 

இந்த சம்பவம் திருப்பூர் விவசாயிகளிடம் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close