Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதுச்சேரி ரிசார்ட்டிலிருந்து புறப்பட்டனர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள்!

இரண்டு வாரத்துக்கும் மேலாக புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியிருந்த டி.டி.வி. தினகரன் ஆதரவு அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் இன்று சென்னை சென்றனர்.

புதுச்சேரி

கடந்த மாதம் 21-ம் தேதி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் அளித்தனர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர். அதையடுத்து, 19 எம்.எல்.ஏ-க்களும் மறுநாளே புதுச்சேரியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டனர். இரண்டு வாரங்கள் கடந்த நிலையில், இன்று காலை அவர்கள் சென்னை புறப்பட்டுச்சென்றனர். ஆளுநர் வித்யாசாகர் ராவை தினகரன் சந்தித்து இல்லம் திரும்ப உள்ளார். இதையடுத்து, எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

தினகரன்

இதனிடையே, ஆளுநரின் பதிலைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்று எம்.எல்.ஏ-க்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 5 எம்.எல்.ஏ-க்கள்  சென்னையில் இருக்கும் நிலையில், ரத்தினசபாபதி, கலைச்செல்வன், செந்தில்பாலாஜி உள்ளிட்ட 16 சட்டமன்ற உறுப்பினர்கள்,  இன்று புதுச்சேரியிலிருந்து சென்னை புறப்பட்டுச்சென்றது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் மீண்டும் ரிசார்ட்டுக்குத் திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close