Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

' காலையில் இருந்தே காத்துக்கொண்டிருக்கிறேன்!' - கிருஷ்ணசாமியை கலாய்க்கும் பாலபாரதி

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அனிதா மரணம்குறித்தும் நீட் தேர்வு பற்றியும் கூறிவரும் கருத்துகள், பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவருகின்றன.  

கிருஷ்ணசாமியின் மகளுக்காக ஜெயலலிதாவிடம் மருத்துவ சீட்டைப் பெற்ற தகவலை ஆதாரத்துடன் பதிவிட்டிருந்தார், பாலபாரதி. இதை எதிர்பார்க்காத கிருஷ்ணசாமி, பாலபாரதியை ஒருமையில் விமர்சித்திருந்தார். இதற்கு எதிராக, சமூக வலைதளங்களில் கிருஷ்ணசாமியை கடுமையாக விமர்சித்துவருகின்றனர் சமூக ஆர்வலர்கள். இதன் அடுத்தகட்டமாக, பாலபாரதி வீட்டின் முன்பு புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

bala bharathi
 

இதுகுறித்து, ஃபேஸ்புக்கில் பதிவுசெய்துள்ள பாலபாரதி. ' இன்று எங்களது இயக்கத்தின் மாவட்ட அலுவலகத்தையும் வீட்டுக்கு முன்னாலும் புதிய தமிழகம் கட்சியினர் கலகம் செய்யப்போவதாக அறிவிப்புச்செய்துள்ளார்கள். பொய், கலகம் செய்யும். உண்மை, புரட்சி செய்யும். வர்ர்லாம் வர்லாம்...' என்று பதிவுசெய்துள்ளார்.

பாலபாரதியிடம் பேசினோம். " கலகம் செய்ய வருவார்கள் என காலையிலிருந்து காத்துக்கொண்டிருக்கிறேன். யாரும் வரவில்லை. காவல்துறைக்குத் தகவல் அளித்துவிட்டோம். பாதுகாப்புக்  கொடுத்துள்ளனர். அவர்கள் வந்தால், அவர்களுடன் விவாதிக்கவும் தயாராக இருக்கிறேன்" என சிரித்தபடியே பேசியவர், " மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வரின் நினைவிடம் அ.தி.மு.க-வுக்குச் சொந்தமானது அல்ல. அங்கு, ஓ.பன்னீர்செல்வம் தியானம் செய்யலாம், எடப்பாடி பழனிசாமி அரசு செல்லலாம், ஆனால், மாணவர்கள் தியானம் நடத்தக்கூடாது. அரசியல்வாதிகள் அங்கு பதவிக்கான போராட்டம் நடத்தலாம். மாணவர்களின் உரிமைக்கான போராட்டம் நடத்தக்கூடாதா? இது, மக்களின் சுதந்திரத்தையும் கருத்துரிமையையும் பறிக்கும் செயல். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பிறகு, அரசுக்கு பயம் வந்துவிட்டது. அதனால்தான், காவல்துறையை வைத்து அடக்குமுறைகளை ஏவிவிடுகின்றனர்" என்றார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close