Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

' போராட்டத்தின் வடிவத்தை மாற்றுங்கள்!' - தி.மு.க செய்தித் தொடர்பாளரின் வேண்டுகோள்

ரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டு தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ' போர்முறையை மாற்றினால்தான் போராட்டத்தின் வழியாகத் தீர்வைக் காணமுடியும்' என்கிறார் தி.மு.க செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். 


protest

தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள்  குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார் தி.மு.க செய்தித் தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன். அந்தப் பதிவில், ' காலம் மாறிக்கொண்டு போகிறது. ஆனால், போராட்ட வழிமுறைகள் இன்னும் மாறவில்லை. அதே வேலைநிறுத்தம்; அதே மனிதச் சங்கிலி; அதே கண்டன ஆர்ப்பாட்டம்; அதே அடையாள  உண்ணாவிரதம்; அதே ரயில் மறியல்; அதே சாலை மறியல், இவை எல்லாம் இன்றைய ஆளும்கட்சி நேற்று எதிர்க்கட்சியாக இருந்தபோது செய்துவிட்டது. இன்றைய எதிர்க்கட்சி நாளை ஆளும்கட்சியாக வருகின்ற நேரத்தில் இம்மாதிரியான போராட்டத்தின் சூட்சுமம் அறிவர். அதனால் இம்மாதிரியான போராட்டங்கள் மீது ஆளும் சக்திகளுக்கு பயம் இருக்காது. போர்முறையை மாற்றினால்தான் போராட்டத்தின் வழியாகத் தீர்வைக் காணமுடியும் இல்லையேல் தினம் தினம் போராட்டத்தை மட்டுமே காணமுடியும். தீர்வு எட்டப்படாது. போராட்டங்களை ஆளுகின்றவர்கள் பழங்கஞ்சியாக நினைக்கும் நிலைதான் உள்ளது' என ஆதங்கப்பட்டிருந்தார். 

radhakrishnan



கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். " போராட்டங்களை அரசு எளிதில் ஒடுக்கிவிடுகிறது. எதற்காகப் போராடுகிறோம் என்பதை அரசுக்கு உணர்த்த வேண்டும். மன்னராட்சி முறையை வீழ்த்திய பிரெஞ்சுப் புரட்சி,  ரஷ்யப் பேரரசின் சமூக இயல்புகளை மாற்றியமைத்த ரஷ்யப் புரட்சி போன்று புரட்சி ஏற்பட வேண்டும். ஜல்லிக்கட்டு நம் அடையாளம்தான். அதற்காக ஒன்றிணைந்த இளைஞர்கள் வாழ்வாதாரமான விவசாயத்துக்காக போராட வேண்டும். ஒவ்வொரு போராட்டத்தையும் ஆளுமை மிக்கவர்கள் வழிநடத்த வேண்டும். ஒவ்வொருவருக்கும் போர்க்குணம் வேண்டும். நாம் செய்யும் போராட்டத்தால் அரசு திருந்த வேண்டும். அரசை கதிகலங்க வைக்க வேண்டும். இளைஞர்கள் புதிய யுக்திகளை கைகொள்ளுங்கள். போராட்ட வடிவத்தை மாற்றுங்கள்’ என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close