Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’முழு மானிய விலையில் பயிர் விதை வேண்டும்’- விவசாயிகள் கோரிக்கை!

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், கயத்தார் மற்றும் எட்டயபுரம் ஆகிய தாலுகாக்களில் முழுமையாக 2.7 லட்சம் ஹெக்டேர் பரப்பில் பரவலாக மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வரப்படுகிறது. இந்த வருடம் புரட்டாசி பட்டத்தில் மானாவாரி பகுதியில் விதைப்பு விதைக்க  முழு மானியத்தில் விதைகளை அரசு வழங்கிட வேண்டுமென மானாவாரி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

vithaippu

இதுகுறித்து பேசிய அயன்வடமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், ''கடந்த ஆண்டு புரட்டாசிப் பட்டத்தில் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், சூரியகாந்தி, பருத்தி, கொத்தமல்லி ஆகியப் பயிர்களைப் பயிரிட்டோம். போதிய மழையில்லாமல் கடுமையான வறட்சியில் பயிர்கள் முளைப்பிலேயே கருகின. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இதே வறட்சி நிலைதான். இதனால் பெருத்த நஷ்டத்தை சந்தித்த விவசாயிகள்  பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியாரிடம் வாங்கிய கடன்களை திரும்பச் செலுத்தமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பல விவசாயிகளின் சொத்துக்கள் ஜப்தி நிலைக்குப் போயின. கடந்த 2 ஆண்டுகளாக விவசாயிகள் செலுத்திய பயிர் காப்பீட்டுத் தொகையையும் விவசாயிகளுக்கு அரசு இன்னமும் வழங்கவில்லை.  இந்நிலையில், புரட்டாசிப் பட்டம் நெருங்கி வரும் வேளையில் ஆடி மாதத்திலிருந்தே விவசாயிகள் தங்கள் நிலங்களில் உழவு, ஆட்டுக்கிடை போட்டு நிலத்தை தயார் செய்து வைத்திருக்கிறார்கள்.

கடந்த காலங்களில் வட்டார வேளாண் விரிவாக்க மையம் மூலம் விதை, உரம் மானியத்தில் தரப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளாக விவசாயிகள், விதைக்குரிய முழுவிலை கொடுத்து கொள்முதல் செய்துபின் ஏற்பு மானியமாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என அரசு அறிவித்தது. இந்த ஆண்டு வேளாண் விரிவாக்க மையங்களில் மக்காச்சோளம், கோவில்பட்டி சோளம், உளுந்து, பாசி, குதிரைவாலி, சூரியகாந்தி ஆகியவற்றில் விவசாயிகள் விரும்பும் ரக விதை இருப்பதில்லை. மேலும், இம்மையங்களில் பண்ணை விதைப்பண்னை மற்றும் பயிறு வகை அபிவிருத்திக்கு மட்டும் விதைகள் குறைந்த அளவில் இருப்பதாக அதிகாரிகள் சொல்கிறார்கள். விவசாயிகள் விரும்பும் விதைகள் இல்லாததால்  விவசாயிகள் தனியார் கடைக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, இந்தாண்டு விதைக்கத் தேவையான விதைகளை விவசாயிகளுக்கு அரசு முழுமானியத்தில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close