Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குளிர வைத்த அமைச்சர்; நொந்துபோன கட்சியினர்‍... கும்பிடு போட்ட முதல்வர்

எடப்பாடி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மதுரையில் பல்கலைக்கழக விழாவில் கலந்துகொண்டார். அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் திருமங்கலம் தொகுதி கப்பலூரில் காமராசர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியின் புதிய கட்டடத்தை முதல்வர் இன்று திறந்து வைத்தார். தூத்துக்குடி கட்சி நிர்வாகி இல்ல விழாவுக்குச் செல்லும் வழியில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதற்காக அதிகாலை முதல் நான்கு வழிச்சாலையில் சர்வீஸ் ரோடுகளை ஆக்கிரமித்து பந்தல்போட்டு, விளம்பரப் பதாகைகளை வைத்திருந்தனர். இதனால் தொலைதூரப் பேருந்துகள், வாகனங்கள் சாலையில் செல்ல முடியவில்லை. 

நல உதவித் தருவதாகக் கிராமப்புற பெண்களையும் பள்ளி, கல்லூரி  மாணவர்களையும் அழைத்து வந்திருந்தனர். இன்று காலை சேலத்திலிருந்து தூத்துக்குடி நிகழ்ச்சிக்குக் கிளம்பிய முதல்வர், திண்டுக்கல்லில் டீ சாப்பிட்டார். அதன் பின்பு ரெஸ்ட் பாயின்டான கப்பலூரில் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியைப் போகிற வழியில் முடித்தார். சாலைப்பயணத்தில் கப்பலூரில் ஓய்வெடுக்க  முதல்வர் திட்டமிட்டதை, தன் தொகுதியில் கல்லூரி கட்டடம் திறக்கும் நிகழ்ச்சியாக மாற்றி முதல்வரைக் குளிர வைத்தார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். அங்கேயே அசைவ சாப்பாடுக்கு ஏற்பாடு செய்திருந்தார். காவல்துறையினரின் கடுமையான கெடுபிடியால் கட்சியினர் மட்டுமல்லாமல் ஊடகத்தினர் மிகவும் நொந்துபோனார்கள். பேட்டி கேட்ட செய்தியாளர்களுக்கு ஒரு கும்பிடு போட்டுக் கிளம்பினார் முதல்வர் பழனிசாமி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close