Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடப்பது ஜெயலலிதா ஆட்சியா? ஆர்.நல்லக்கண்ணு சந்தேகம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி என்று தற்போது ஆட்சி நடத்துபவர்கள் தங்களுடைய பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்காக மத்திய அரசிடம் காத்துக்கிடக்கிறார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு விமர்சித்துள்ளார்.

சிவகங்கையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. இத்தகைய தேர்வால் தமிழக மாணவர்கள் மட்டுமல்லாமல் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருக்கும் ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நீட் தேர்வு எதிர்ப்பு மாணவர்களின் உரிமை. இதில் அரசியல் புகுத்தக் கூடாது. தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் தொடரும். தமிழக அமைச்சர், நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் எங்கள் கொள்கை என்று சொல்லியிருக்கிறார். ஆனால், போராடும் மாணவர்களை அடக்குமுறை செய்கிறார்கள். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி என்று தற்போது ஆட்சி நடத்துபவர்கள் தங்களுடைய பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்காக மத்திய அரசிடம் காத்துக்கிடக்கிறார்கள். மத்திய அரசு இங்கே என்ன செய்ய நினைக்கிறதோ அதை இவர்களை வைத்து நடத்தி முடிக்கிறது. நீட் தேர்வு, காவிரி மேலாண்மை வாரியம், விவசாயிகள் பிரச்னை, குடிதண்ணீர் பிரச்னை, வரலாறு காணாத வறட்சி எனத் தமிழகத்தில் தீர்க்கப்படாதபடி இருக்கின்றன. மக்கள் பிரச்னைகளைப் பற்றிக் கவலைப்படாத அரசாக எடப்பாடி அரசு இருக்கிறது. மேலும் அவர் மத்திய அரசின் தயவால் தம் பதவியைக் காப்பாற்றிக்கொள்வதிலேயே அதிகக் கவனம் செலுத்தி வருகிறார். பத்திரிகையாளர் கௌரி லங்கேஸ் சமூக நீதி, சமூக நல்லிணக்கம், மதவாதம், பெண்ணுரிமைக்காகத் தொடர்ந்து போராடியவர். அவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மதவாத அமைப்புகளை எதிர்த்து நாம் போராட வேண்டும்'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close