Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தினகரன் டு எடப்பாடி பழனிசாமி: ஜம்ப் அடித்த ஜக்கையன்!

தினகரன் அணியில் இருந்த கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜக்கையன், இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாறியுள்ளார்.

ஜக்கையன்


ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க ஏகப்பட்ட அணிகளாகச் சிதறியது. பின்னர், பன்னீர்செல்வம், பழனிசாமி அணியினர் இணைந்தனர். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் போர்க்கொடி தூக்கினர். குறிப்பாக, பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அவர்கள் ஆளுநரைச் சந்தித்துக் கடிதம் வழங்கினர். இதைத்தொடர்ந்து, மேலும் சில எம்.எல்.ஏ-க்கள் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனிடையே, பெரும்பான்மையை இழந்ததால் முதல்வர் பழனிசாமியைச் சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று சந்தித்தனர். இதற்காக, புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியிருந்த எம்.எல்.ஏ-க்கள் சென்னை வந்தனர். இதனிடையே, தினகரன் அணியில் இருந்த கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜக்கையன், இன்று திடீரென்று எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாறியுள்ளார். சபாநாயகர் தனபாலைச் சந்தித்த ஜக்கையன், முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜக்கையன், "அ.தி.மு.க-வின் உள்கட்சி பிரச்னையைப் பயன்படுத்தி, தி.மு.க எங்களது ஆட்சிக்குப் பங்கம் ஏற்படுத்திவிடுமோ என்று எனக்கு அச்சம் இருக்கிறது. அதனால்தான் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். பிரச்னையைப் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று தினகரன் அணியில் இருக்கும்போதே நான் அவர்களிடம் கூறினேன். முதல்வராக எடப்பாடி பழனிசாமி தொடரவே நான் விரும்புகிறேன். மேலும், சில எம்.எல்.ஏ-க்களும் அங்கிருந்து இங்கு வருவார்கள்" என்றார்.

இந்நிலையில், ஜக்கையன் அணி மாறியது குறித்து தினகரன் கூறுகையில், "எதிர் தரப்பினர், தன்னை மிரட்டுவதாக ஜக்கையன் ஏற்கெனவே என்னிடம் கூறியிருந்தார். குதிரை பேரம் இன்றும் நடந்துகொண்டிருக்கிறது" என்றார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close