Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அபு சலீமை தூக்குத் தண்டனையிலிருந்து காப்பாற்றிய போர்ச்சுகல்!

பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1993-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி மதியம் 1.30 மணியளவில் மும்பை பங்குச்சந்தையின் தரைப்பகுதியில் முதல் குண்டு வெடித்தது. 50 பேர் பலியாகினர். மதியம் 1.30 மணி முதல் 3.30 மணிக்குள் மும்பையில் 13 இடங்களில் தொடர்ச்சியாகக் குண்டுகள் வெடித்தன.

மும்பை வெடிகுண்டு வழகில் தீர்ப்பு

கல்பாதேவி, சிவ சேனா பவன், ஏர்இந்தியா கட்டடம், நரிமன் பாயின்ட் போன்றவை அதில் முக்கியமானவை. குண்டுவெடிப்பில் 257 பேர் கொல்லப்பட்டனர். 700-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். ரூ.27 கோடி மதிப்புள்ள சொத்துகள் சேதமடைந்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அதிகளவில் ஆர்.டி.எக்ஸ் ரக வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டன. மும்பைக் குண்டு வெடிப்பு சம்பவத்தில்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சமயத்தில்தான் வீட்டில் ஏ.கே- 56 ரகத் துப்பாக்கி வைத்திருந்ததாக நடிகர் சஞ்சய்தத் கைது செய்யப்பட்டார். மும்பை வெடிகுண்டு வழக்கு கடந்து வந்த பாதையைப் பார்ப்போம். 

1993-ம் ஆண்டு, சஞ்சய் தத் உள்பட 189 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

1993-ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதி சி.பி.ஐ வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

1994-ம் ஆண்டு ஆர்தூர் சிறையில் தடா தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. 

1995-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி 26 பேரை தடா நீதிமன்றம் விடுவித்தது. தற்போது சமாஜ்வாடி கட்சித் தலைவராக உள்ள அபு ஆஸ்மியை உச்ச நீதிமன்றம் விடுவித்தது. 

1995 ஏப்ரல் 19-ம் தேதி வழக்கு விசாரணைத் தொடங்கியது. 

1995 ஜூன் 30 குற்றவாளிகளான முமகது ஜமீல், உஸ்மான் ஜான்கான் அப்ரூவராக மாறினார்கள்.

1995 அக்டேபார் 14-ம் தேதி நடிகர் சஞ்சய் தத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 

2006 ஜூன் 6-ம் தேதி, நிழல் உலக தாதா அபுசலீமின் வழக்கு தனியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. 

2003 செப்டம்பரில் வழக்கு விசாரணை முடிந்தது. தீர்ப்பு பின்னர் அறிவிக்கப்படும் எனச் சொல்லப்பட்டது. 

2006 செப்டம்பர் 12-ம் தேதி, நீதிபதி பி.கே.கோட் தீர்ப்பளித்தார். யாகூப் மேமனுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.
20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார். 

2013-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி, உச்ச நீதிமன்றம் யாகூப் மேமன் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது. 10 பேரின் தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 

2015-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி, நாக்பூர் சிறையில் யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார்.

2017-ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி மும்பை குண்டுவெடிப்பில் அபுசலீம் தொடர்புடைய வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் கரியமுல்லாகான், அபு சலீமுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தாகிர் மெர்ச்சன்ட், பிரோஸ் அப்துல் ரஷீத் கான் ஆகியோருக்குத் தூக்குத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் அபுசலீமுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்படவில்லை. போர்ச்சுகல் நாட்டில் பதுங்கியிருந்த அபூ சலீமை 2005-ம் ஆண்டு, அந்நாட்டு அரசு இந்தியாவிடம் ஒப்படைத்தது. போர்ச்சுகலில் மரணதண்டனைக்குத் தடை இருக்கிறது. போர்ச்சுகல் அரசிடம் அபுசலீமுக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என வாக்குறுதி அளித்துதான் சி.பி.ஐ அதிகாரிகள் அவரை இந்தியாவுக்குக் கொண்டு வந்தனர். மரண தண்டனை அமலில் உள்ள நாட்டில் பிடிபட்டிருந்தால், அவருக்கும் தூக்குத்தண்டனைதான் விதிக்கப்பட்டிருக்கும். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான தாவுத் இப்ராஹூமும், டைகர் மேமனும் இதுவரை பிடிபடவில்லை. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close