Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அனிதா தற்கொலை.. நீட் விவகாரம்.. கொந்தளிக்கும் திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள்

அனிதா, anitha

“அனிதாவின் மரணத்துக்கு மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்”, போன்ற கோரிக்கைகளை முன்வைத்து திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைத் தொடர்ந்து புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

anitha, அனிதா

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், “நீட் தேர்வு என்பது தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவைப் பறிக்க நினைக்கும் ஒரு ஆயுதம். நாங்கள் சட்டக் கல்லூரி மாணவர்கள். எங்களுக்கு இந்த சமூகம் மீதான அக்கறை அதிகமாக இருக்கிறது. எங்கள் தலைமுறைக்காக நாங்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறோம். மருத்துவக் கனவுடன் இருக்கும் வருங்கால மாணவர்கள் லட்சக் கணக்கில் செலவழித்து சி.பி.எஸ்.இ பாடத்தைப் படிக்கும் கட்டாய நிலை ஏற்படும். இன்று நீட் தேர்வினால் அனிதா என்ற சகோதரியை நாங்கள் இழந்து விட்டோம். மேலும், இதுபோன்ற உயிரிழப்புகள் நடக்காமல் இருக்க நீட் தேர்வு ரத்துசெய்யப்பட வேண்டும். அனிதாவின் மரணத்துக்கு காரணமானவர்கள் பதவி விலக வேண்டும். நீட் தேர்வு ரத்துசெய்யும் வரை போராட்டம் தொடரும். இந்தப் பிரச்னையை அடுத்த கட்டமாக மனித உரிமைகள் ஆணையத்திடம் எடுத்துச் செல்ல இருக்கிறோம்”, எனக் கூறினார்கள்.

அனிதா, anitha

போராட்டத்தை இவர்கள் தொடங்கியபோது, சட்டக் கல்லூரியின் ஆசிரியர் லதா, ‘அனுமதியின்றி போராட்டம் நடத்துவது தவறு’ என்று மாணவர்களிடம் அறிவுரை வழங்கினார். ஆனால், மாணவர்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர். பின், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருச்சி மாவட்ட காவல் துணை ஆணையர் சத்தி கணேசன் மாணவர்களிடம் போராட்டத்தைக் கைவிடும்படியாக கேட்டுக்கொண்டார். அதை ஏற்க மறுத்து, சட்டக் கல்லூரியில் இருந்து டி.வி.எஸ் டோல்கேட் வரை ஊர்வலம் செல்ல முயன்ற 52 சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் கைதுசெய்யப்பட்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close